»   »  நமீதா இருக்க பயமேன்!

நமீதா இருக்க பயமேன்!

Subscribe to Oneindia Tamil

ஆணழகன் பிரஷாந்த்துடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் கட்டழகி நமீதா.

மூத்த நடிகர்களுடன் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த நமீதா, முதல் முறையாக சின்னப் பையன் பிரஷாந்த்துடன் ஜோடி சேருகிறார். தகப்பன் சாமி எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரஷாந்த்துக்கு 3 ஜோடிகள் (எங்கதான் தம்பிக்கு மச்சம் இருக்கோ!). கவர்ச்சிக்கு நமீதா, நடிப்புக்கு சந்தியா, போதாதற்கு சுஜா என்றஒரு புதுமுகத்தையும் புக் பண்ணியிருக்கிறார்கள்.

எல்லா ஹீரோவுக்கும் சரியான ஹீரோயின் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும். ஆனால் பிரஷாந்துக்கு மட்டும் அந்தப் பிரச்சினையே இல்லை. யாருடன் ஜோடிசேர்ந்து நடித்தாலும் பட்டையைக் கிளப்பி விடுவார். இப்போது தகப்பன் சாமியிலும் நமீதாவுடன் சேர்ந்து கலக்கத் தயாராகி வருகிறார்.

வின்னர் படத்தில் கிரணை, குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியது போல, தகப்பன் சாமியிலும் நமீதாவையும் நச் என்று காட்டப்போகிறார்களாம். அதே நேரத்தில் சந்தியாவுக்கு கொஞ்சம் டீசன்ட்டான வேடமாம். புதுமுகம் சுஜாவும் கவர்ச்சிக்கு ஒகே சொல்லியுள்ளாராம்.

நமீதா சமீப காலமாக துணி போட்டுத்தான் நடிக்கிறாரா, இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார். ஆணை படத்தில்நமீதாவின் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சிக்கி அர்ஜூன் திணறி வருகிறாராம். பாதிக் காட்சிகளை சென்சார்காரர்கள் வெட்டித் தள்ளி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்குமிதமிஞ்சிய அளவுக்கு கிளாமர் உள்ளதாம்.

எதையெல்லாம், எப்படியெல்லாம் போகஸ் செய்ய வேண்டுமோ, அப்படியெல்லாம் செய்து அசத்தியிருக்கிறாராம் நமீதா. அவரது திமிறலைப் பார்த்து ரசிகர்கள்பெருமூச்சு விடப் போவது நிச்சயம் என்கிறது ஆணை படக் குழு.

நமீதா இருக்கும் நம்பிக்கையில்தான் தகப்பன் சாமி படக் குழுவினர் தெம்பாக இருக்கிறார்களாம். காமடிக்கு கருணாஸும், கஞ்சா கருப்பும் உள்ளார்கள். தேவாவின்மகன் ஸ்ரீகாந்த் தேவாதான் இசை. ஹரியின் உதவியாளரான ஷிவசண்முகம் படத்தை இயக்கப் போகிறார்.

தகப்பன்சாமி என்று அழகான பெயர் வைத்துள்ளார்கள். படத்தில் அழகிகளின் கொட்டத்தை மட்டும் காட்டாமல் நல்ல கருத்துக்களையும் வைப்பார்கள் என்றுநம்புவோம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil