காரம், கவர்ச்சி, நமீதா! குளுகுளு கவர்ச்சி எல்லோருக்கும் தெரியும். காரமான கவர்ச்சி தெரியுமோ? தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கோங்க. கோலிவுட்டில் கவர்ச்சிக்கு புதிய இலக்கணம் படைத்து வரும் நமீதாவை வைத்து சூடான கவர்ச்சிப் பாட்டை சமீபத்தில்சுட்டுள்ளார்கள் பம்பரக் கண்ணாலே படத்திற்காக. ஸ்ரீகாந்த்துடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நமீதா. பிரசாத் ஸ்டுடியோவில் இருவரையும் வைத்து ஒரு வித்தியாசமான பாடலை படமாக்கினார்கள். தகவல் கிடைத்து அங்கு பறந்துபோய் பார்த்தோம். போனால் பகீர் என்றது. காரணம் ஜில் நமீதா காரமான மிளகாய் வற்றல்களுக்கு மத்தியில் காய்ந்து போய்க்கிடந்ததைப் பார்த்துத் தான். நல்லா காஞ்சு போன குண்டு மிளகாய் வற்றல்களை குவித்து வைத்து சின்னச் சின்ன மலைகள் போல செட் போட்டிருந்தார்கள்.அதற்கு நடுவில் நமீதாவும், ஸ்ரீகாந்த்தும் டூயட் பாடி ஆட்டம் போட்டார்கள். பாட்டை முடித்து விட்டு நமீதா வந்தபோது அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. படு காரமான அந்தப் பாட்டில் நடித்துமுடித்து விட்டு வந்த அவர், ஏதோ எரிமலைக் குழம்புக்குள் போய் விட்டு வந்தது போல செக்கச் செவேல் என்று இருந்தார். அத்தோடு அச் அச் என்று அடுக்குத் தும்மல் வேறு. ஏங்க, நடிப்புக்காக இப்படியெல்லாமா கஷ்டப்பட வேண்டும் என்று ஒருகர்ச்சீப்பை கையில் கொடுத்தபடி கேட்டால், சினிமான்னு வந்துவிட்டால் கஷ்டத்தையெல்லாம் பார்க்க முடியுமா சார்? காட்சி வித்தியாசமாக வர வேண்டும் என்பதற்காக இப்படி செட் போட்டிருந்தார்கள். வந்து பார்த்த போது பயமாகத் தான்இருந்தது. இருந்தாலும் பாட்டும், டான்ஸும் சூப்பராக வந்திருப்பதாக காட்சி முடிந்து இயக்குனர் கூறியபோது எனக்குரொம்ப சந்தோஷமாக இருந்தது. கவர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு ஜில்லுன்னு இருக்கும். ஆனால் இந்தக் காட்சியை கவர்ச்சியுடன் மிகவும் காரமாகவும்பார்த்து ரசிப்பார்கள். பாட்டை முடித்து விட்டு உடம்பு எரிச்சலைப் போக்க நாலு ரவுண்டு குளித்தாராம் நமீதா. அப்படியும் அச்சும் போகவில்லை,உடம்பில் ஏறிய காரமும் போகவில்லையாம். வெள்ளரிக்காயை வெட்டி அதைத் தேய்ச்சுக் குளிக்க வேண்டும் என்றபடி வேகம் வேகமாக வீட்டுக்கு ஓடினார் நமீ. சரி, இந்தக் காரக் கவர்ச்சியில் ஸ்ரீகாந்த் என்ன ஆனார்னு சொல்லவே இல்லையே!

By Staff

குளுகுளு கவர்ச்சி எல்லோருக்கும் தெரியும். காரமான கவர்ச்சி தெரியுமோ? தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

கோலிவுட்டில் கவர்ச்சிக்கு புதிய இலக்கணம் படைத்து வரும் நமீதாவை வைத்து சூடான கவர்ச்சிப் பாட்டை சமீபத்தில்சுட்டுள்ளார்கள் பம்பரக் கண்ணாலே படத்திற்காக. ஸ்ரீகாந்த்துடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நமீதா.

பிரசாத் ஸ்டுடியோவில் இருவரையும் வைத்து ஒரு வித்தியாசமான பாடலை படமாக்கினார்கள். தகவல் கிடைத்து அங்கு பறந்துபோய் பார்த்தோம். போனால் பகீர் என்றது. காரணம் ஜில் நமீதா காரமான மிளகாய் வற்றல்களுக்கு மத்தியில் காய்ந்து போய்க்கிடந்ததைப் பார்த்துத் தான்.

நல்லா காஞ்சு போன குண்டு மிளகாய் வற்றல்களை குவித்து வைத்து சின்னச் சின்ன மலைகள் போல செட் போட்டிருந்தார்கள்.அதற்கு நடுவில் நமீதாவும், ஸ்ரீகாந்த்தும் டூயட் பாடி ஆட்டம் போட்டார்கள்.

பாட்டை முடித்து விட்டு நமீதா வந்தபோது அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. படு காரமான அந்தப் பாட்டில் நடித்துமுடித்து விட்டு வந்த அவர், ஏதோ எரிமலைக் குழம்புக்குள் போய் விட்டு வந்தது போல செக்கச் செவேல் என்று இருந்தார்.


அத்தோடு அச் அச் என்று அடுக்குத் தும்மல் வேறு. ஏங்க, நடிப்புக்காக இப்படியெல்லாமா கஷ்டப்பட வேண்டும் என்று ஒருகர்ச்சீப்பை கையில் கொடுத்தபடி கேட்டால், சினிமான்னு வந்துவிட்டால் கஷ்டத்தையெல்லாம் பார்க்க முடியுமா சார்?

காட்சி வித்தியாசமாக வர வேண்டும் என்பதற்காக இப்படி செட் போட்டிருந்தார்கள். வந்து பார்த்த போது பயமாகத் தான்இருந்தது. இருந்தாலும் பாட்டும், டான்ஸும் சூப்பராக வந்திருப்பதாக காட்சி முடிந்து இயக்குனர் கூறியபோது எனக்குரொம்ப சந்தோஷமாக இருந்தது.

கவர்ச்சி என்றாலே நம்மவர்களுக்கு ஜில்லுன்னு இருக்கும். ஆனால் இந்தக் காட்சியை கவர்ச்சியுடன் மிகவும் காரமாகவும்பார்த்து ரசிப்பார்கள்.

பாட்டை முடித்து விட்டு உடம்பு எரிச்சலைப் போக்க நாலு ரவுண்டு குளித்தாராம் நமீதா. அப்படியும் அச்சும் போகவில்லை,உடம்பில் ஏறிய காரமும் போகவில்லையாம்.

வெள்ளரிக்காயை வெட்டி அதைத் தேய்ச்சுக் குளிக்க வேண்டும் என்றபடி வேகம் வேகமாக வீட்டுக்கு ஓடினார் நமீ.

சரி, இந்தக் காரக் கவர்ச்சியில் ஸ்ரீகாந்த் என்ன ஆனார்னு சொல்லவே இல்லையே!

Read more about: hot glamour by namitha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X