அம்மன் கெட்டப்புல நான் நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பேன்.. நமிதாவின் புதிய அவதார வீடியோ வந்திருக்கு!
சென்னை: தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக படங்களில் குத்தாட்டம் போட்ட பல நடிகைகள் அம்மனாக நடித்து ரசிகர்களை கையெடுத்து கும்பிடவும் வைத்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், மீனா, ரோஜா என பல்வேறு நடிகைகள் அந்த காலத்திலேயே அம்மனாக நடித்து வந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி கலரிங் ஹேருடன் நயன்தாராவை அம்மனாக மூக்குத்தி அம்மன் படத்தில் காட்டியிருந்தார்.
அடுத்ததாக நடிகை திரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இன்னொரு பிரபல கவர்ச்சி நடிகையும் அம்மனாக அவதாரம் எடுத்துள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

அது வேறு யாருமில்லை "அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடு அர்ஜுனா", "சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா" என ஆட்டம் போட்ட நம்ம நமிதா தான்.
அம்மனாக மாறிய நமிதா: தமிழ் சினிமா நடிகை நமிதாவுக்கு அம்மன் கதாபாத்திரம் கொடுக்காமல் மிஸ் செய்து விட்டது என நமிதாவுக்கு அம்மன் வேஷம் போட்டு அழகு பார்த்துள்ள மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராஜலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அந்த வீடியோவை ஷேர் செய்து இப்படியொரு கேப்ஷனும் கொடுத்துள்ளார். மற்ற நடிகைகளை விட அம்மன் கதாபாத்திரத்தில் அப்படியே அம்சமாக பொருந்தி போகிறார் நமிதா என்றும் எப்படியாவது வெள்ளித் திரையில் இவரை அம்மனாக பார்க்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
நயன்தாராவுக்கே டஃப்: ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் நயன்தாராவின் லுக் மற்றும் அவர் அணிந்து வந்த சேலை எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில், நயன்தாராவுக்கே செம டஃப் கொடுக்கிறார் அம்மன் லுக்கில் நமிதா என அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கையெடுத்து கும்பிடும் எமோஜிக்களை அதிகம் போட்டு வருகின்றனர்.
திரிஷாவுக்கு பதிலாக: ஆர்ஜே பாலாஜி அடுத்து திரிஷாவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் போல 'மாசாணி அம்மன்' படத்தை இயக்கப் போவதாக கூறப்படும் நிலையில், திரிஷாவுக்கு பதிலாக நமிதாவை காஸ்ட் பண்ணுங்க சிறப்பாக இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
அரசியல் என்ன ஆச்சு?: நடிகை நமிதா சமீப காலமாக மீண்டும் சினிமா சம்பந்தப்பட்ட பேட்டிகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வம் காட்டுவது என ரூட்டை மாற்றி வருகிறார். பாஜகவில் சேர்ந்து அரசியல் செய்து வந்த நமிதா அரசியலில் சமீப காலமாக அதிக ஆர்வம் செலுத்தாமல் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications










