»   »  சந்தோஷ நந்தனா

சந்தோஷ நந்தனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணக் கோலம் காணப் போகும் நந்தனா கலயாணத்திற்குப் பிறகும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பாராம்.

மீரா ஜாஸ்மினுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நந்தனா. அழகான முகம், அம்சமான தோற்றம்,பரவாயில்லை ரக நடிப்பு என எல்லாம் சரியாக இருந்தும் கூட நந்தனா பெரிய அளவுக்கு பிரகாசிக்கவில்லை.

நடிக்க வந்த கொஞ்ச நாளிலேயே பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுடன் காதல் வயப்பட்டார். அதன்பின்னர் நந்தனாவை பார்க்கவே முடியவிலலை. காதலில் பிசியாக இருந்த அவர் சினிமாவில் நடிபபதற்குஆர்வம் காட்டவில்லை. இவர்களது திருமணம் குறித்து இடையில் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் இப்போதுஎல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இருவரது திருமணமும் நிச்சயமாகியுள்ளது.

கல்யாண பூரிப்பில் உள்ள நந்தனாவிடம் அட்வான்ஸ வாழ்த்துக்களை தெரிவித் அவளாவினோம். நடிப்பை விடஎனக்கு படிப்பு முக்கியம். அதனால் தான் பாதியில் விட்ட எனது பி.காம் படிப்பை இப்போது முடித்தேன்.தற்போது கம்பெனி செகரட்டரி படிப்பை தொடர்ந்து வருகிறேன்.

மலையாளத்திலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தபோது எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதில்ஸ்ரீகாந்த்துடன் நடிக்கும் வாய்ப்பும் ஒன்று. ஆனால் கிளாமராக நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் தன்அதிக படங்களில் நான் நடிக்க விரும்பவில்லை. எனக்குப் பிடித்த ரோல்களை மட்டுமே செய்து வந்தேன்.

சாதுர்யன், கலிங்கா, ஏபிசிடி என சில படங்களில் நடித்துள்ள நந்தனாவின் நடிபபில் உருவாகியுள்ள ஜோக்கர்என்ற படம் முடிந்து ரிலீஸுக்கு காத்துள்ளதாம்.

நந்தனா நடிக்க வந்த பிறகு, நமது கணவரும் திரைத்துரையைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என முடிவுசெய்து விட்டாராம். அவர் நினைத்தது போலவே மனோஜ் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமாகி விட்டாராம்.

மனோஜ் என்ன சாதாரண குடும்பத்து பிள்ளையா, பாரதிராஜா என்ற இமயத்தின் மகன். அவர் எனது கணவாராகவருவது எனது பாக்கியம். நான் நிறையப் படங்களில் நடிக்காமல் இருக்கலாம். ஆனால், நான் நடித்த படங்கள்எல்லாம் நல்ல படங்கள் என்ற திருப்தி எனக்கு உள்ளது என்கிறார் நந்தனா.

கல்யாணத்திற்குப் பிறகும் நடிப்பீங்களா என்று கேட்டால், நல்ல ரோல் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன. எனதுகணவரும் அதற்கு பச்சைக் கொடி காட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil