»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நந்தனா ஞாபகம் இருக்கிறதா. ஜூனியர் சிவாஜி என்ற அடைமொழியுடன் வந்த சிவாஜியின் பேரன்துஷ்யந்தனுக்கு ஜோடியாக சக்ஸஸ் என்ற படத்தில் நடித்தாரே அவரே தான்.

சிவாஜியின் பெயரையே கெடுக்கும் வகையில் நடித்திருந்தார் துஷ்யந்த். நடிக்கவும் வராமல், ஆடவும் தெரியாமல்சொதப்பியிருந்தார்.

சிவாஜியின் பேரன் என்பதால், அவருடன் ஜோடி சேருவதால் எங்கேயோ போய் விடுவோம் என்று நினைத்தார்நந்தனா. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சான்ஸ்கள் கிடைக்காமல் சொந்த ஊரான கேரளாவுக்கே போகும்நிலைமை தான் ஏற்பட்டது.

பொறுத்துக் கொண்டு சான்ஸ்களுக்காகக் காத்திருந்தார். இந் நிலையில் ரவீன்காந்த், தான் இயக்கும் துள்ளல் என்றபடத்திற்கு நந்தனாவை புக் செய்யப் போனார். ஆனால், அவரிடம் கதை கேட்ட நந்தனா. கதைப்படி ஏகத்துக்கும்கவர்ச்சி காட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து கதை திருப்திகரமாக இல்லை என்று சொல்லி டைரக்டரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்நந்தனா.

காசைக் கூட சில லட்சம் போட்டுத் தருகிறோம் என்று பேசிப் பார்த்தும் பலன் ஏற்படவில்லையாம்.

கடுப்பாகிப் போய் திரும்பி வந்த ரவீன்காந்த், வந்த வேகத்தில் மன்மத ராசா சாயா சிங்கை புக் செய்துவிட்டாராம்.

எவ்வளவு கேக்குறீங்களோ அவ்வளவு கவர்ச்சி காட்டுவேன் என்று உறுதிமொழி தந்திருக்கிறாராம் சாயா.

சான்ஸ் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தாலும், கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு கவர்ச்சி காட்டிநடிக்க மறுத்த நந்தனாவை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

Please Wait while comments are loading...