»   »  நந்தனாவின் "ஒத்துழைப்பு"

நந்தனாவின் "ஒத்துழைப்பு"

Subscribe to Oneindia Tamil

சக்ஸஸ் நாயகி நந்தனா கோலிவுட்டில் ரொம்ப நல்ல பிள்ளை என்று பெயரெடுத்து வருகிறார். நடிப்பில் அல்ல, ஒத்துழைப்பில் தான்!

சக்ஸஸ் படத்தில் சிவாஜியின் பேரன் துஷ்யந்த்துடன் அறிமுகமாகி படத்தோடு சேர்ந்து எடுபடாமல் போனவர் நந்தனா. நீண்டஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவு கட்டி ஒரே நேரத்தில் கலிங்கா, உன்னைக் கண்டேனடி, ஏபிசிடி, சாதுர்யன் என 4படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் இடம் பிடிக்கும் விடாப்பிடியான வெறியுடன் இருக்கும் நந்தனா, அதற்காக சில பல சமரசங்களுக்கும் தயாராகி விட்டார். இப்போதுநடித்து வரும் படங்களில் அவர் கொடுக்கும் ஒத்துழைப்பைப் பார்த்து இயக்குனர் முதல் தயாரிப்பாளர், ஹீரோ வரை அத்தனை பேரும்ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்களாம்.

நந்தனாவை அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டதாம். நள்ளிரவில் கூட போனைப் போட்டு நந்தனா, நலந்தானா? என்றுஉளறும் அளவுக்கு நந்தனாவின் நந்தலாலா அவர்களை பாடாய்ப்படுத்துகிறதாம்.

நந்தனா ரொம்ப நல்ல பொண்ணு, நடிப்பைப் போலவே நட்புக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்நந்தனாவால் பலனடைந்தவர்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட் விஷயத்தில், சமீபத்திய கேரள வரவுகளிலேயே இவர் தான் மிக அசாத்தியமான துணிச்சல் காட்டுகிறார் என்கிறார்கள்.

அத்தோடு, குணாலோடு நடித்து வரும் சாதுர்யன் படத்தில் "ஏ" கிளாஸாக கலக்கி வருகிறார் நந்தனா.

இந்தப் படத்தில் நந்தனா ஒரு நடிகையாகவே நடித்து வருகிறார். அதில் இவர் பெயர் ரம்யா. இவர் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ்செய்யும் நபர் நடிகையை வளைக்கப் பார்க்க அவரிடமிருந்து தப்ப முடியாமல் தவிக்கும் கேரக்டராம் நந்தனாவுக்கு.

இவரது காதலராக வருகிறார் குணால்.. (இவர் நடிக்கும் ஒரு படமும் ஓடாட்டியும் இந்த தம்பிக்கு எப்போதும் கோடம்பாக்கத்தில் ஏதாவதுசூட்டிங் விடாம நடந்துக்கிட்டு தான் இருக்கு)

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு காதலனைக் கைப்பிடிக்க ஒரு நடிகை என்ன பாடு பட வேண்டியிருக்கிறது என்பதை விளக்கும் ரோல்நந்தனாவுக்கு.

இந்த படத்தை இயக்குவது டி.ஜே. குமார். படத்தை தயாரிப்பது லட்சுமி ராஜு பிக்சர்ஸ். இசை தேவா. படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் முடிந்துகோடை விடுமுறையிலேயே படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதே போல காலிகா படத்திலும் நடிகர் பாலாவோடு நன்றாகவே கட்டிப்புடி கலக்கல் செய்து வருகிறார். இதில் பள்ளி மாணவி வேடத்தில்நடிக்கிறார். தனது உருவத்துக்கு பத்தாத சின்ன சைஸ் ஸ்கூல் யூனிபார்மில் படம் முழுவதும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் நந்தன.

இந்த இரு படங்களிலும் காட்டும் தனது கலைச் சேவை மூலமும், தனது இத்யாதி கவனிப்புகளாலும் தமிழில் ஒரு பிரேக் கிடைக்கும் என மிகநம்பிக்கையுடன் இருக்கிறார் நந்தனா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil