ஹீரோயின்
அழகியில் அசத்திய நந்திதா தாஸ் அதற்குப் பிறகு கன்னத்தில் முத்தமிட்டாலில் நடித்ததோடு இந்திக்கேபோய்விட்டார். இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். இம்முறை மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாகநடிக்கப் போகிறார்.
பார்த்திபனுடன் நந்திதா நடித்த அழகி அவருக்கு மிக நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. கிராமத்து அபலைப்பெண் ஒரு குழந்தையுடன் நகரத்தில் படும்பாட்டை அழகாக செய்திருந்தார் நந்திதா. கன்னத்தில் முத்தமிட்டாலில்போராளிப் பெண் வேடத்திலும் அசத்தினார்.
அதற்குப் பிறகு பல தமிழ் வாய்ப்புக்கள் அவரைத் தேடி வந்தன. ஆனால், அந்தப் படங்களின் கதைகள்நந்திதாவுக்கு திருப்தி தரவில்லை. இதனால் நடிக்க மறுத்துவிட்டார்.
இப்போது மம்ட்டிக்கு ஜோடியாக மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் நந்திதா. படத்தின் பெயர்உள்ளிட்ட இன்னும் முடிவாகவில்லை. ஹீரோ, ஹீரோயின் தான் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











