»   »  கும்தலக்கடி நந்திதா!

கும்தலக்கடி நந்திதா!

Subscribe to Oneindia Tamil

கும்தலக்கடி கும்மா என்று சொல்வது வழக்கம். ஆனால் அந்த கும்தலக்கடி என்ற வார்த்தையையே ஒரு படத்திற்கு பெயராக வைத்து ஒரு கும்மாவான படம் தயாராகப் போகிறது.

தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய டான்ஸ் மாஸ்டர்கள் நிறையப் பேர். சுந்தரம், அவரது மகன்கள் ராஜு சுந்தரம், பிரபு தேவா, அப்புறம் லாரன்ஸ் ராகவேந்திரா என இது ஒரு பெரிய வரிசை.

அந்தக் காலத்தில் சுந்தரம் போலவே பிரபலமாக இருந்த இன்னொரு மாஸ்டர்தான் சின்னா. 27 வருடமாக டான்ஸ் மாஸ்டராக, முன்னணி ஹீரோக்களை ஆட்டுவித்த சின்னாவின் சீமந்தப் புத்திரிதான் ஈர நிலம் நாயகி நந்திதா.

முதல் படத்திற்குப் பிறகு நந்திதாவை ஹீரோயினாகப் பார்க்க முடியாத பாக்கியம் தமிழ் ரசிகர்களுக்கு. குத்தாட்டம், செகண்ட் ஹீரோயின் என தத்தித் தத்தித் தாவி வருகிறார் நந்திதா.

இந் நிலையில் சின்னாவின் இன்னொரு வாரிசும் நடிக்க வருகிறது. ஆனால் இந்த முறை வருவது ஆம்பளை. அதாவது சின்னாவின் மகன் ரங்கா. மகனை ஹீரோவாகப் போட்டு அப்பா சின்னாவே ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளார். படத்தையும் அவேர இயக்கப் போகிறாராம்.

படத்திற்கு கும்தலக்கடி என்று குஜாலாக பெயர் வைத்துள்ளனராம்.

ஹீரோயினாக புதுமுகத்தைப் போடவுள்ளனர். அக்கா நந்திதாவும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம்.

தம்பி நடிக்கும் படத்தில் நந்திதாவுக்கு கிளாமர் டான்ஸ் இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நந்திதாவையும் தூக்கி விடும் வகையில் தூக்கலான கேரக்டரைக் கொடுப்பார் அப்பா சின்னா என நம்பலாம்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் நந்திதாவை ஹீரோயினாகப் போட்டு சூப்பராக ஒரு படம் இயக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் சின்னா.

Read more about: nandhita in gumthalakkadi
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil