சிகப்பு சேலையில் என்னமா கிக்கேத்துராங்க குமுதா!
சென்னை : இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை நந்திதா இப்பொழுது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் கலக்கிக் கொண்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நெஞ்சம் மறப்பதில்லை ஒரு வழியாக வெளியாகி வெற்றியும் பெற்றது இதில் நடிகை நந்திதா வித்தியாசமான ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என பல திரைப்படங்களுக்கு இவர் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பாராட்டுளையும் பெற்றிருக்க இப்போது சிகப்பு நிற சேலையில் கிக்கேத்தும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

திருப்புமுனையை ஏற்படுத்திய
கன்னடத்தில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அட்டகத்தி எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றி பெற அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய எதிர்நீச்சல் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சிறந்த நடிகை
தமிழ் சினிமாவில் அவ்வப்போது அத்தி பூத்தாற்போல் சில வித்தியாசமான கதை களத்தை கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றியும் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான முண்டாசுப்பட்டி மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது இதில் நடிகை நந்திதா ஹீரோயினாக நடித்து சிறந்த நடிகைக்கான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றிருந்தார்.

துணிச்சலுடன் நடித்து
தொடர்ந்து குடும்பபாங்கான கதைகளில் நடித்து போரடித்து போனதோ என்னவோ தெரியவில்லை வரவர கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டி வரும் நந்திதா திரைப்படங்களிலும் ஏடாகூடமான பாத்திரங்களில் மிகவும் துணிச்சலுடன் நடித்து அதிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை இவருக்கு பலரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

இடையழகை காட்டி
இப்பொழுது ஐபிசி 379 என்ற திரைப்படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வரும் நந்திதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் கிக்கேத்தும் லுக்கில் இடையழகை காட்டி கொண்டு அம்சமாக நின்று கொண்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டவாறு வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











