அட்டகத்தி நாயகி "நந்திதா ஸ்வேதா" .. இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துகள் !
சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
Recommended Video
நடிகை ஸ்வேதா தொகுப்பாளராக தனது திரை வாழ்வை துவங்கியவர். தனது முதல் படமான "நந்தா லவ்ஸ் நந்திதா" என்கிற கன்னட படத்தின் மூலம் ஸ்வேதா என்கிற தன் பெயரை நந்திதா ஸ்வேதா என மாற்றிக்கொண்டார்.
இதன் பின் நந்தித்தா ஸ்வேதா என்கிற பெயரிலே அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நந்திதா தன் முதல் படத்திலே ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்று மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

குமுதா ஹேப்பி
அட்டகத்தி வெற்றிக்கு பிறகு நந்திதாவிற்கு தமிழில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் ஓட்டபந்தய வீராங்கணையாக நடித்து அசத்தினார் இந்த கதாபாத்திரமும் இவருக்கு பெயர் சொல்லும்படியாக இருந்தது. அதன்பின் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்தில் நந்திதா நடித்த குமுதா கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடபட்டது.

விஜய்க்கு ஜோடி
அட்டக்கத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார போன்ற படங்களில் தொடர்ந்து வெற்றி பிறகு, இவர் கதாப்பாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்தார். அப்போது தான், நந்திதாவிற்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. புலி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தில் சிறிது நேரமே வரும் காட்சி என்றாலும், அந்த படத்திற்கு அந்த காட்சிதான் மிக முக்கியமானதாகும்.

பிலிம் ஃபேர் விருது
தெலுங்கு திரைத்துறையில் நுழைந்து தனது வெற்றிப்பயணத்தை தொடங்கினார் நந்திதா ஸ்வேந்தா. இவர், நடித்த "எக்கட்டி போதாடு சின்னவாடு" என்ற படத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். இதையடுத்து, தெலுங்கிலும் நல்ல பெயர் பெற்ற நந்திதா. தற்போது தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

பிறந்த நாள் வாழ்த்து
நந்திதா ஸ்வேதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துகளை கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நந்திதா ரசிகர்களின் அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் ரசிகர்களை போலவே நந்திதாவின் நண்பர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர் .

டிக்டாக்கில் ஆர்வம்
நந்திதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்தாலும், இவர் அதிகமாக பயன்படுத்துவது டிக்டாக் தான். டிக்டாக்கில் ஆர்வம் கொண்ட இவர் தினமும் டிக்டாக்கில் வீடியோவை எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், ரசிகர்கள் செய்யும் டிக்டாக் காணொளிக்கு உடனே நன்றி தெரிவித்து ரசிகர்களின் நடிப்பை பாராட்டி தள்ளி விடுவார். பெரும்பாலுமான நாயகிகள் இன்ஸ்டாகிராமில் தான் அதிக ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், டிக்டாக்கில் சுமார் 20லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் பெருமை நந்தித்தாவிற்கு உள்ளது .


Click it and Unblock the Notifications











