தபாங் 3... இவர் வாய்ஸில்தான் தமிழ் பேசுகிறார் சோனாக்‌ஷி

By

சென்னை: சல்மான் கானின் தபாங் 3, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாகிறது. இந்த மூன்று மொழிகளிலும் நடிகை நந்திதா ஸ்வேதா, சோனாக்‌ஷிக்கு டப்பிங் பேசியுள்ளார்.

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம், தபாங். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து, அடுத்த பாகம் உருவானது. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ஹிட். இப்போது 3 வது பாகம் உருவாகியுள்ளது.

Nandita Swetha has dubbed for Sonakshi in the Tamil, Telugu and Kannada versions of Dabangg 3.

இதில் சல்மான் கான் சல்புல் பாண்டே கேரக்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்கியுள்ளார். ஏற்கனவே வான்டட் படத்தில், சல்மான் கானை இயக்கியிருந்தார்.

இதில், பல்லி சிங் என்ற கேரக்டரில் கன்னட ஹீரோ சுதீப் வில்லனாக நடித்துள்ளார். இவர் தமிழில், நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி படங்களில் நடித்தவர்.

இதில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பாடல் காட்சி சமீபத்தில் சர்ச்சையானது. அந்தப் பாடலில் சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிக்கு இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Nandita Swetha has dubbed for Sonakshi in the Tamil, Telugu and Kannada versions of Dabangg 3.

இந்நிலையில் இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மூன்று மொழிகளும் சோனாக்‌ஷிக்கு நடிகை நந்திதா ஸ்வேதா டப்பிங் பேசியுள்ளார்.

தமிழில், அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட சில படங்களில் நடித்தவர், கன்னட நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தெலுங்கிலும் நடித்துவருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X