சான்ஸ் இல்லைன்னா சப்ஸ்கிரிப்ஷனே துணை.. நல்லா இருந்த நந்திதாவும் இப்படி இறங்கிட்டாங்களே!
சென்னை: நடிகைகள் கிரண், பூனம் பஜ்வா, தர்ஷா குப்தா வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் இன்னொரு பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதாவும் சப்ஸ்கிரிப்ஷனில் சம்பாதிக்க முடிவெடுத்து களமிறங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமிலேயே நடிகைகள் இஷ்டத்துக்கு கவர்ச்சி உடைகளில் தான் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதை விட எக்ஸ்ட்ரா பார்க்க வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா காட்ட தயார். ஆனால், கட்டணம் செலுத்த வேண்டும் என சப்ஸ்கிரிப்ஷன் முறையை சமீப காலமாக பிக் பாஸ் பிரபலங்கள் தொடங்கி ஏகப்பட்ட மாடல் நடிகைகளும் ஆரம்பித்து கல்லா கட்டி வருகின்றனர்.

தெலுங்கில் விஷ்ணுப்ரியா, மலையாளத்தில் அஸ்வினி எல்லாம் மாசத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து வரும் நிலையில், நம்ம ஊர் பலூன் அக்கா அரோரா சின்க்ளேரும் பல லட்சம் சம்பாதித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், 36 வயதாகும் நந்திதா ஸ்வேதாவும் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் தாவி விட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் இப்படியும் சம்பாதிக்கலாம்: இனிமேல் கஷ்டப்பட்டு சினிமாவுக்காக சான்ஸ் தேடி அலைவதும், அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னையில் சிக்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிங்க. இன்ஸ்டாகிராமில் இப்படியும் சம்பாதிக்கலாம் என ஏகப்பட்ட சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல மாதம் ஒருவரிடம் 390 ரூபாய் மற்றும் அதற்கு மேல் தங்களது சந்தா தொகையாக நிர்ணயித்து சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பிக்க, அந்த மாடல் அழகியையோ நடிகையையோ வெறித்தனமாக ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் சப்ஸ்கிரிப்ஷனில் காசு கட்டி இணைந்தால் அந்த பிரபலத்துக்கு அதன் மூலம் காசு கொட்டோ கொட்டு என கொட்டுதாம்.
பல லட்சம் வருமானம்: மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நடிகைகள் மற்றும் இன்ஸ்டா இளவரசிகள் எல்லாம் அதில் ஒரு 100 பேர் சப்ஸ்கிரைபர்களாக சேர்ந்தாலே மாதம் 40 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்றும் குறைந்த பட்சம் 1000 பேர் சேர்ந்துவிட்டால் மாதம் 4 லட்சம் அல்வா போல அள்ளலாம் என ஆரம்பித்து ராணி போல வாழ்ந்து வருகின்றனர். அரோராவுக்கு எல்லாம் 2500 பேருக்கு மேல் சப்ஸ்கிரைபர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இருந்தனர்.
அட்டகத்தி நந்திதாவும் களத்தில் குதிச்சிட்டாரு: அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் "ஆடிப்போனா ஆவணி.. அவ ஆளை மயக்கும் தாவணி" என அறிமுகமான நந்திதா விஜய் சேதுபதியின் குமுதாவாக கும்முன்னு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் கலக்கியவர் இத்தனை ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கம்முன்னு இருந்த நிலையில், இனிமேல் சும்மா இருக்க முடியாது என சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் வண்டியை ஜம்முன்னு ஸ்டார்ட் செய்துள்ளார்.
கலாய்க்கும் ஃபேன்ஸ்: ஆரம்பித்த உடனே ஒரு 80 பேருக்கு மேல் குமுதா என நந்திதா ஸ்வேதா பக்கம் சப்ஸ்கிரைப் செய்து அவரது எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து வருகிறார்களாம். கூடிய விரைவிலேயே 1000 பேர் சேர்ந்துவிட்டால் குமுதா ஹேப்பி அண்ணாச்சி தான் என்கின்றனர். கடைசியாக வைபவ் நடிப்பில் வெளியாகி ஃப்ளாப்பான ரணம் படத்தில் 2024ல் நடித்திருந்தார். அதன் பின்னர் நந்திதாவுக்கு ஒரு படமும் கிடைக்காத நிலையில், இப்படி இறங்கிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications