ஹீரோயின்
அழகியும், கன்னத்தில் முத்தமிட்டாலும் வெற்றியைப்பெற்று விடவே நந்திதா தாஸ் வேகமாய் முன்னணி தமிழ் ஹீரோயின் வரிசைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நந்திதா தாஸ் கவலையுடன் தான் இருக்கிறார்.
இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நந்திதா தாஸின் கதவை தட்டிய வண்ணம் உள்ளனர். கதவைத் திறந்து,உட்கார வைத்துப் பேசினால் டப்பாக் கதைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்களாம்.
இதனால் தாஸ் வெறுத்துப் போய் உள்ளார். இரண்டு படங்களில் கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
சில மலையாளப் படத் தயாரிப்பாளர்களும் கூட நந்திதாவை அணுகி வருகின்றனர். ஆனால் அவற்றிலும் கூட கதை திருப்தி இல்லை என்கிறார்.
அவரிடம் கால்ஷீட் கேட்டுவிட்டு வெறும் கையுடன் திரும்பி வந்த ஒரு தயாரிப்பாளர் கூறியது:
நந்திதாவுக்கு தங்கர்பச்சானும், மணி ரத்னமும் மட்டுமே நல்ல "டைரடக்கர்"களாகத் தெரிகிறார்கள். மற்ற "டைரடக்கர்கள்"குறித்தும் அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தான் நல்லது என்றார் கவுண்டமணி ஸ்டைலில் .
ஓ, நீங்க தான் அந்த டப்பா தயாரிப்பாளரா என்று கேட்பதற்கு முன் ஆள் காரில் ஏறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











