கையில் சரக்கு பாட்டில்.. குடித்துவிட்டு ஆட்டம்.. தசரா ப்ரோமோஷனில் பேன்சை பதறவிட்ட கீர்த்திசுரேஷ்!
மும்பை : நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் சரக்கு பாட்டிலுடன் வந்து ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படத்தில், நானி, கீர்த்தி சுரேஷ்,சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.
கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் நானியின் தசரா
நடிகர் நானி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறி உள்ளா. இவரது நடிப்பில் ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றன. இதில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வசூலை அள்ளியது.

30ந் தேதி ரிலீஸ்
இந்த படத்தைத் தொடர்ந்து ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக உருவாகி உள்ள படம் தான் தசரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ள இந்த படத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பல மொழிகளில், இந்த மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தூம் தாம் பாடல் ரிலீஸ்
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை படத்தின் லிரிக் வீடியோவை மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில், கீர்த்தி சுரேஷ், நானி ராணா கலந்துகொண்டனர்.
நானியுடன் ஆட்டம்
தசரா பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை மொத்தமாக குடிக்கும் காட்சி இருக்கும், அதைப்போலவே நானி, புரமோஷன் நிகழ்விலும் செய்து காட்டினார். அப்போது, அந்த பாட்டிலை வாங்கிய கீர்த்தி சுரேஷ், நானியைப் போல சரக்கை கல்பாக அடித்தார். அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த பாட்டிலில் மது இல்லை வெறும் குளிர் பானம் தான் இருந்தது என தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்திருந்தவர்களும் அந்த குளிர்பானத்தை வழங்கினார் கீர்த்தி சுரேஷ்.


Click it and Unblock the Notifications