சாக்கடைக்குள் விழுந்த அமலா பால்
நல்ல தண்ணீரில் தான் நிற்பேன், நடப்பேன் என கடல் நீரைக் கூட மினரல் வாட்டராக மாற்றச் சொல்லும் பந்தா நடிகைகளுக்கு மத்தியில், சாக்கடைக்குள் இறங்கி நடித்து, தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார் அமலா பால்.
சாதாரணமான நடிகையாக தமிழ் சினிமாவுக்குள் வந்து இன்று முன்னணி நடிகையாக மாறி நிற்கிறார் அமலா பால்.
சமீபத்தில் தெலுங்கில் ஒரு படத்தில் காட்சிக்காக சாக்கடைக்குள் தயங்காமல் குதித்து நீண்ட நேரம் நின்று நடித்துள்ளாராம் அமலா பால்.

’மைனா’வின் மைனா
அமலா பால் சர்ச்சைக்குரிய, சிந்துசமவெளியில் அறிமுகம் என்றாலும், 'மைனா' தான் இந்த மைனாவை பிரபலப்படுத்தியது.

வேட்டையாடிய படங்கள்...
அதன் பிறகு புதுத் தெம்புடன் தெய்வத்திருமகள், வேட்டை என பெரிய ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்தார்.

கிசு...கிசு...
மறுபக்கம் சித்தார்த், டைரக்டர் விஜய் என கிசுகிசுக்கள் தூள் பறந்தாலும், அம்மணி நடிப்பிலும், அழகிலும் ரசிகர்களை கிறங்கடித்தார்.

தங்கம் மெருகூட்டப்பட்டது...
நடிப்பிலும், அழகிலும் மேலும் மெருகேற மேல்நாடு சென்று தன் கொடியிடையை மேலும் மெல்லிடை ஆக்கிக் கொண்டு திரும்பி வந்தார்.

ஜெயம் ரவியுடன்
தற்போது தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் "ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் புதிய படம் 'நிமிர்ந்து நில்'

தெலுங்கிலும் ஹீரோயின் தான்...
தெலுங்கில், "ஜன்டாவை கவிராஜு என்ற பெயரில் 'நிமிர்ந்து நில்' தற்போது உருவாகிறது. அதிலும் அமலா பாலே நாயகியாக நடிக்க, "நான் ஈ நானி ஜோடி சேர்ந்துள்ளார்.

சாக்கடையில் மைனா...
ஒருநாள் படப்பிடிப்பின் போது, 'சாக்கடையில் இறங்கி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும்' என்று கூறினாராம், இயக்குனர். இதற்கு, முகத்தில் துளியும் அருவருப்பைக் காட்டாமல், உடனே, நடிக்க தயாராகி விட்டாராம், அமலா பால்.

சாக்லேட் உடல், சாக்கடையில்...
முப்பது நிமிடங்கள் நடந்த, இந்த படப்பிடிப்பில், அமலா பாலின் பாதி உடல், சாக்கடையில் மூழ்க, நானியோ கழுத்து வரை அந்த சாக்கடையில் மூழ்கியபடியே நடித்தாராம்.

ஆச்சரியம்... ஆனால், உண்மை!!!
அமலா பால், சாக்கடையில் இறங்கி நடித்ததை, பலரிடமும் கூறி, ஆச்சர்யப்படுகின்றனர், படக் குழுவினர்.


Click it and Unblock the Notifications











