பிரசாந்துடன் தான் கடைசி: இனி குத்தாட்டம் போட மாட்டேன்- நர்கிஸ் ஃப்கரி திடீர் முடிவு

By Siva

சென்னை: குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவுக்கும், செக் குடியரசைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. அமெரிக்காவில் உள்ள குயீன்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு பிரபலமான மாடல்.

நர்கிஸை பார்த்த பாலிவுட்காரர்கள் பொண்ணு பரபரவென இருக்கிறதே என்று நினைத்து அவரை இந்தியா அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர்.

ராக்ஸ்டார்

ராக்ஸ்டார்

ரன்பிர் கபூர் நடித்த ராக்ஸ்டார் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நர்கிஸ் ஃபக்ரி.

சாஹசம்

சாஹசம்

பிரசாந்த் நடிக்கும் சாஹசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் நர்கிஸ் ஃபக்ரி. பிரசாந்துடன் ஆடியது ஸ்பெஷலான அனுபவம் என்று தெரிவித்துள்ளார் நர்கிஸ்.

குத்தாட்டம்

குத்தாட்டம்

சாஹசம் படத்தில் ஆடியதோடு சரி இனி எந்த படத்திலும் குத்தாட்டம் போட மாட்டேன். நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டிலும்

பாலிவுட்டிலும்

தமிழில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட கையோடு ஏன் நர்கிஸ் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று நினைக்கிறீர்களா? பாலிவுட்டில் அவரை குத்தாட்டம் போடத் தான் அழைக்கிறார்கள். இப்படியே போனால் நம்மை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மாட்டார்களோ என்ற பயம் வந்திருக்கலாம் அவருக்கு.

சென்னை

சென்னை

சென்னைக்கு 2 முறை வந்துள்ளேன். முன்பு அனைத்து தென்னிந்திய படங்களும் சென்னையில் தான் எடுக்கப்பட்டன என்று எனக்கு தெரியும். நான் தமிழ் படங்களில் நடிக்க விரும்பினேன். இந்நிலையில் தான் தியாகராஜன் என்னை ஒரு பாடலுக்கு ஆட அழைத்தபோது உடனே சம்மதம் தெரிவித்தேன். இங்கு திறமையான நடிகர்கள் உள்ளனர் என்றார் நர்கிஸ்.

குயீன்

குயீன்

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கங்கனா ரனாவத் நடித்த இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். தமிழில் கங்கனா கதாபாத்திரத்தில் நர்கிஸை நடிக்க வைக்க தியாகராஜன் திட்டமிட்டுள்ளாராம்.

ஒரு ரவுண்ட்

ஒரு ரவுண்ட்

34 வயதானாலும் இளம்நடிகைகள் பார்த்து பொறாமைப்படும் வகையில் உள்ள நர்கிஸ் நினைத்தால் கோலிவுட்டில் ஒரு பெரிய்ய்ய ரவுண்ட் வரலாம்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு நர்கிஸ் ஃபக்ரியை மட்டும் கைவிட்டுவிடுமா என்ன?. வட இந்தியாவில் இருந்து வந்த நடிகைகளை தமிழ்நாடு வாழவைத்தது, வைத்துக் கொண்டிருக்கிறது, வாழ வைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X