»   »  தமிழகத்தை விரைவில் தாக்க வருகிறது பக்ரி 'புயல்'!

தமிழகத்தை விரைவில் தாக்க வருகிறது பக்ரி 'புயல்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nargis Fakhri
பாகிஸ்தான்- அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்பான நர்கீஸ் பக்ரி, விரைவில் கோலிவுட்டுக்கு 'குட்மார்னிங்' சொல்ல வருகிறார்.

புதுப் புது முகங்களாகப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் கோலிவுட்டினர். பழைய முகங்களைக் கழித்து விட்டு புதுப் புது நடிகைகளாக தேடி வருகின்றனர். கதையைத் தேடுகிறார்களோ இல்லையோ, நல்ல கலர்புல் நாயகிகளாக தேடிப் பிடிப்பதில் மெனக்கெடுகிறார்கள், போட்டோ ஆல்பத்தோடு ரூம் போட்டு குரூப் குரூப்பாக அலசி ஆராய்ந்து செலக்ட் செய்கிறார்கள் - நாயகிகளை.

அப்படியாப்பட்ட ஒரு ஆய்வில்தான் 'யு ஆர் செலக்டட்' என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரராகியுள்ளார் நர்கீஸ் பக்ரி. இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. பாகிஸ்தானிய-அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்புதான் இந்த 'பிரளய' பக்ரி. தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ள பக்ரி, அங்கு ராக்ஸ்டார் படத்தில் களேபரம் செய்தவர். அடுத்து இவர் வரப் போவது கோலிவுட்டுக்காம்.

மேலும் 2வது இந்திப் படத்திலும் புக் ஆகி விட்டாராம் பக்ரி. அப்படத்தில் அக்ஷய் குமாருடன் ஜோடி போடும் அவர் செம கிளர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

சமீபத்தில் சென்னைக்கும் வந்து விட்டுப் போனார் பக்ரி. நடிப்புக்கோஸ்ரம்தான் சென்னைக்கு வந்தீங்களா என்று அவரிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இது வேறு விஷயத்திற்காக. நான் தமிழ் சினிமாவுக்கு வரப் போவது உண்மைதான். அதுகுறித்த மேல் விவரங்களை இப்போதே சொல்ல முடியாது. பேசியிருக்கிறேன். ஹீரோ யார் என்பது குறித்தும் நான் சொல்ல முடியாது. நிச்சயம் அது முன்னணி ஹீரோதான் என்று அழகாக சிரித்தபடி சொன்னார்.

மாடல் அழகியாக இருந்து நடிகையாக புரமோட் ஆனவர் பக்ரி. சரி மெட்ராஸ் பத்தி என்ன சொல்றீங்க என்று பக்ரியிடம் கேட்டால், அட ரொம்ப சுத்தமான ஊரா இருக்குங்க. அழகா இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு தென்னிந்திய சாப்பாடு வகைகளை ஒரு கை பார்க்க தயாராகி வருகிறேன் என்றார் குதூகலித்தபடி.

பக்ரியை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பின்னே, வந்தவுடன் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை கற்றுக் கொண்டு விட்டு கலக்கி விட்டாரே, அதற்காகத்தான். அடுத்து வாடா, போடா, மச்ச்சான்ஸ் போன்ற இலக்கியங்களையும் கூட பக்ரி கற்றுத் தேறுவார் என்று நம்பலாம்.

பக்ரியுடன் சேரப் போகும் அந்த பக்கிரிச்சாமி யார் என்பதுதான் தெரியலே...

English summary
Pakistani-Amercian actress Nargis Fakhri who made her Bollywood debut with 'Rockstar', opposite Ranbir Kapoor is all set to enter into Kollywood with a leading star in a movie soon. Nargis has also signed her second Hindi film, 'Khiladi 786' with Akshay Kumar. She says, “It’s a completely different role from 'Rockstar'. I play a stylish girl who falls in love with Akshay. I have upped my glamour quotient for this film.”
Please Wait while comments are loading...