அப்படியே என் போஸ்டரை காப்பி அடிச்சுடானுவளே... பூனம் பாண்டேமீது பாயும் வீணா
மும்பை: கவர்ச்சித் திலகங்கள் வீணா மாலிக்குக்கும், பூனம் பாண்டேவுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தனது படத்தின் போஸ்டர்களை அப்படியே பூனம் பாண்டேவின் நாஷா படத்தில் காப்பி அடித்து விட்டதாக வீணா குமுறியுள்ளார்.
அப்படியே திருடி விட்டார்கள் என் படத்தின் போஸ்டர்களை என்று விசனம் காட்டியுள்ளார் வீணா.
இந்த புதிய மோதலால் பாலிவுட்டில் கவர்ச்சி வார்த்தை விளையாடல்கள் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பலர் சேர்போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்க தயாராகி வருகின்றனர்.

முதல்ல நாஷா
கவர்ச்சிப் படங்களாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. ஆனால் இதற்கான அடிப்படை.. இந்திய கிரிக்கெட் அணி முன்பு நிர்வாண போஸ் தருவேன் என்று அவர் சொன்னது.

நடிப்புக்குத் தாவிய பூனம்
கவர்ச்சி போஸ்களை மட்டுமே போட்டு வந்த பூனம் திடீரென நடிப்புக்கும் தாவிய படம்தான் இந்த நாஷா.

நாசமாப்போச்சே...
இந்த நாஷா குறித்துத்தான் தற்பபோது வீணா மாலிக் புலம்பபியுள்ளார். தனது சூப்பர் மாடல் படத்தின் போஸ்டர் டிசைனை சுட்டுத்தான் நாஷா போஸ்டரை வடிவமைத்துள்ளதாக அவர் குமுறுகிறார்.

என்னோடததுதான் ஒரிஜினல்
நாஷா படத்தின் போஸ்டர் மாதிரியே உங்க போஸ்டர் இருக்கே என்று அவரிடம் கேட்டபோது, அடடா, நான்தாங்க ஒரிஜினல். என்னோட படத்தின் போஸ்டர்தான் ஒரிஜினல். இதைத்தான் நாஷாக்காரங்க சுட்டுட்டாங்க என்றார் கோபத்துடன்.

எல்லாத்தையும் சுட்டுட்டாங்கப்பா
மேலும் அவர் கூறுகையில், லுக், போஸ்டர் டிசைன் என பலதையும் சுட்டிருக்காங்க. இப்போததுான் எனது படத்தின் போஸ்டரை முதல் முறையாக சுட்டுள்ளளனர் என்றார் வீணா.

சீனாவது மிஞ்சுமா
மேலும் அவர் சொல்கையில், எனது படத்தின் காட்சிகளையாவது விட்டு வைத்துளள்ளார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதெல்லாம் கிடையாது
ஆனால் நாஷா படத்தின் இயக்குநர் அமீக் சக்ஸேனா இதை மறுக்கிறார். அவர் கூறுகையில், நாங்கள் 7 மாதத்திற்கு முன்பே இதை வடிவமைத்து விட்டோம். ஏன் இப்போது இதை பிரச்சினையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் எங்களது டிசைன்தான் ஒரிஜினல் என்றார்...


Click it and Unblock the Notifications











