விடாமல் விரட்டுதே.. மேலும் ஒரு பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை!

By

மும்பை: பிரபல நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்கொல்லி வைரஸான கொரோனா, நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால் மக்களும் பீதியில் இருக்கின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழகத்தில் இது தீவிரமாக இருக்கிறது. இந்தப் பரவலைத் தடுக்க அரசுகள் போராடி வருகின்றன.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் குணமடைந்தனர். நடிகர் சஞ்சய் தத், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா டெஸ்ட்

கொரோனா டெஸ்ட்

அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருந்தும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு இந்தி நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர், பிரபல இந்தி நடிகை நடாஷா சுரி. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

வீட்டில் தனிமை

வீட்டில் தனிமை

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து பூனேவுக்குச் சென்றிருந்தேன். மும்பை திரும்பியதும் சோர்வாக உணர்ந்தேன். காய்ச்சல், தொண்டை பிரச்னையும் இருந்தது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் கொரோனா டெஸ்ட் செய்துகொண்டேன். அதில் எனக்கு பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன்.

கலந்துகொள்ள இயலாது

கலந்துகொள்ள இயலாது

காய்ச்சல் குறையவில்லை. உடல் சோர்வும் இருக்கிறது. வீட்டில் சகோதரியும் பாட்டியும் இருக்கிறார்கள். அவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனால் டேஞ்சரஸ் படத்தின் புரமோஷனில் என்னால் கலந்துகொள்ள இயலாது. இவ்வாறு கூறியுள்ளார். புஷன் படேல் இயக்கியுள்ள ஹாரார் த்ரில்லர் படமான டேஞ்ச்ரஸின் புரமோஷன் நாளை முதல் தொடங்க இருக்கிறது.

விர்ஜின் பானுப்ரியா

விர்ஜின் பானுப்ரியா

இதில், பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை நடாஷா சுரி, மலையாளத்தில் திலீப்புடன் கிங் லையர் படத்தில் நடித்துள்ளார். இந்தியில், பா பா பிளாக் ஷீப், விர்ஜின் பானுப்ரியா படங்களில் நடித்திருக்கிறார். அமேசானில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். முன்னாள் மிஸ் இந்தியாவான இவர், ஏராளமான விளம்பரங்களிலும் இசை ஆல்பங்களிலும் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X