»   »  நடாஷா மீண்டும் தலைமறைவு காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருடன் நடாஷா மீண்டும் தலைமறைவாகி விட்டதாக போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.நடிகர் பரத், நடிகை சந்தியா நடித்து வெளிவந்த "காதல் படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் வந்த பாடல்களும்பிரபலம் அடைந்தன. இதனால் இப் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரும் பிரபலம் ஆகிவிட்டார். இந் நிலையில் காதல் படத்துக்கு இசை அமைத்த போது, இசைக் குழுவில் கீ போர்டு வாசித்த நடாஷா என்ற இளம்பெண்ணுடன்நெருங்கிய நட்பு ஏற்பட்டது.நடாஷா பெங்களூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் கல்லூரி மாணவி. வசதியான குடும்பம். தந்தை துபாயில் பணியாற்றிவருகிறார். தாயுடன் இருந்த நடாஷா, இசைக்காக சென்னையில் தங்கி வந்தார்.இந் நிலையில் நடாஷாவின் தாயார், தன்னுடைய மகளை இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் கடத்திச் சென்று விட்டார் என்றுபெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீசார் சென்னை போலீசாரின் உதவியோடு இரண்டுபேரையும் தேடினர்.சென்னை போலீசார் தேடியதும், இருவரும் பத்திரிகையாளர் முன் திடீரென ஆஜராகி பேட்டி அளித்தனர். அப்போது நடாஷாகூறுகையில், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் மேஜர். என் விருப்பம் போல் இருக்கலாம் என்றுதெரிவித்தார்.பேட்டியளித்துவிட்டு வெளியே வரும் போது, அவர்களை பிடிக்க போலீசார் காத்திருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் வேறுவழியாக இருவரும் தப்பினர். பல நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரையும் போலீசார்பிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், நடாஷாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள பெண்கள் விடுதியில்நடாஷா தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே இசையமைப்பாளர் ஜோஷ்வா, பட அதிபர் ஒருவரிடம் மோசடி செய்ததாக கூறிகைது செய்யப்பட்டார்.இந் நிலையில் அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் நடாஷாவை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடாஷா மேஜராகி விட்டதால், அவர் விருப்பப்படி வாழலாம் என்றுஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பிறகு சில நாட்களில் நடாஷா பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மீண்டும் நடாஷா வீட்டில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனது மகள் ஜோஸ்வாவுடன் மீண்டும்தலைமறைவாகி விட்டார் என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்கும்படியும் சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்மீண்டும் அவரது தாயார் புகார் செய்துள்ளார்.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடாஷா மீண்டும் தலைமறைவு காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருடன் நடாஷா மீண்டும் தலைமறைவாகி விட்டதாக போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.நடிகர் பரத், நடிகை சந்தியா நடித்து வெளிவந்த "காதல் படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் வந்த பாடல்களும்பிரபலம் அடைந்தன. இதனால் இப் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரும் பிரபலம் ஆகிவிட்டார். இந் நிலையில் காதல் படத்துக்கு இசை அமைத்த போது, இசைக் குழுவில் கீ போர்டு வாசித்த நடாஷா என்ற இளம்பெண்ணுடன்நெருங்கிய நட்பு ஏற்பட்டது.நடாஷா பெங்களூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் கல்லூரி மாணவி. வசதியான குடும்பம். தந்தை துபாயில் பணியாற்றிவருகிறார். தாயுடன் இருந்த நடாஷா, இசைக்காக சென்னையில் தங்கி வந்தார்.இந் நிலையில் நடாஷாவின் தாயார், தன்னுடைய மகளை இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் கடத்திச் சென்று விட்டார் என்றுபெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீசார் சென்னை போலீசாரின் உதவியோடு இரண்டுபேரையும் தேடினர்.சென்னை போலீசார் தேடியதும், இருவரும் பத்திரிகையாளர் முன் திடீரென ஆஜராகி பேட்டி அளித்தனர். அப்போது நடாஷாகூறுகையில், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் மேஜர். என் விருப்பம் போல் இருக்கலாம் என்றுதெரிவித்தார்.பேட்டியளித்துவிட்டு வெளியே வரும் போது, அவர்களை பிடிக்க போலீசார் காத்திருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் வேறுவழியாக இருவரும் தப்பினர். பல நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரையும் போலீசார்பிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், நடாஷாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள பெண்கள் விடுதியில்நடாஷா தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே இசையமைப்பாளர் ஜோஷ்வா, பட அதிபர் ஒருவரிடம் மோசடி செய்ததாக கூறிகைது செய்யப்பட்டார்.இந் நிலையில் அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் நடாஷாவை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடாஷா மேஜராகி விட்டதால், அவர் விருப்பப்படி வாழலாம் என்றுஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பிறகு சில நாட்களில் நடாஷா பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மீண்டும் நடாஷா வீட்டில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனது மகள் ஜோஸ்வாவுடன் மீண்டும்தலைமறைவாகி விட்டார் என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்கும்படியும் சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்மீண்டும் அவரது தாயார் புகார் செய்துள்ளார்.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருடன் நடாஷா மீண்டும் தலைமறைவாகி விட்டதாக போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

நடிகர் பரத், நடிகை சந்தியா நடித்து வெளிவந்த "காதல் படம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் வந்த பாடல்களும்பிரபலம் அடைந்தன. இதனால் இப் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதரும் பிரபலம் ஆகிவிட்டார்.

இந் நிலையில் காதல் படத்துக்கு இசை அமைத்த போது, இசைக் குழுவில் கீ போர்டு வாசித்த நடாஷா என்ற இளம்பெண்ணுடன்நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

நடாஷா பெங்களூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் கல்லூரி மாணவி. வசதியான குடும்பம். தந்தை துபாயில் பணியாற்றிவருகிறார். தாயுடன் இருந்த நடாஷா, இசைக்காக சென்னையில் தங்கி வந்தார்.

இந் நிலையில் நடாஷாவின் தாயார், தன்னுடைய மகளை இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் கடத்திச் சென்று விட்டார் என்றுபெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீசார் சென்னை போலீசாரின் உதவியோடு இரண்டுபேரையும் தேடினர்.

சென்னை போலீசார் தேடியதும், இருவரும் பத்திரிகையாளர் முன் திடீரென ஆஜராகி பேட்டி அளித்தனர். அப்போது நடாஷாகூறுகையில், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் மேஜர். என் விருப்பம் போல் இருக்கலாம் என்றுதெரிவித்தார்.

பேட்டியளித்துவிட்டு வெளியே வரும் போது, அவர்களை பிடிக்க போலீசார் காத்திருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் வேறுவழியாக இருவரும் தப்பினர். பல நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரையும் போலீசார்பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், நடாஷாவை அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள பெண்கள் விடுதியில்நடாஷா தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே இசையமைப்பாளர் ஜோஷ்வா, பட அதிபர் ஒருவரிடம் மோசடி செய்ததாக கூறிகைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் அகில இந்திய மாதர் சங்கம் சார்பில் நடாஷாவை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடாஷா மேஜராகி விட்டதால், அவர் விருப்பப்படி வாழலாம் என்றுஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பிறகு சில நாட்களில் நடாஷா பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது மீண்டும் நடாஷா வீட்டில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனது மகள் ஜோஸ்வாவுடன் மீண்டும்தலைமறைவாகி விட்டார் என்றும் அவரை கண்டுபிடித்துக் கொடுக்கும்படியும் சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜிடம்மீண்டும் அவரது தாயார் புகார் செய்துள்ளார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more about: natasha again vanished

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil