மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் கிளாசாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்… தெறிக்கும் இணையம் !

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் , மெஸ்ஸியின் ஜெர்ஸியை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் மெர்சிக்கு தலை வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களே ஆன நிலையில் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

நிதி மற்றும் கட்டமைப்புத் தடைகள் காரணமாக மெஸ்ஸி மற்றும் பார்சிலோனா அணிக்கு இடையேயான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸி வெளியேறுகிறார் என்று பார்சிலோனா நிர்வாகம் அறிவித்தது கால்பந்து ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

இதுகுறித்து அந்த அணி சார்பாக நடத்தப்பட்ட பிரியா விடை நிகழ்வில் மெஸ்ஸி பேசும்போது, அணியில் நீடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். என் தலையில் நிறைய விஷயங்கள் ஓடுகின்றன. இன்னும் பார்சிலோனா அணியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற யதார்த்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கண்ணீருடன் மெஸ்ஸி

கண்ணீருடன் மெஸ்ஸி

பார்சிலோனா அணியில் நான் அறிமுகப்படுத்தப்பட்டதை என்னால் மறக்க முடியாது. எல்லாம் எங்கு தொடங்கியதோ அதனை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். நான் அணியிலிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தேன். எனது சம்பளத்திலிருந்து 50% குறைத்துக் கொள்ளக்கூட நான் சம்மதித்தேன். நம் அனைவருக்கும் நல்ல காலமும் இருக்கும், கெட்ட காலமும் இருக்கும். ஆனால், எப்போதும் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மாறாது என்று கண்ணீருடன் மெஸ்ஸி தெரிவித்தார்.

மெஸ்ஸிக்கு ஆதரவு

மெஸ்ஸிக்கு ஆதரவு

மெஸ்ஸி உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகின. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், மெஸ்ஸி குறித்து சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி அவர் மீதான அன்பை வெளிப்படுத்தி வருகின்றன.

மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன்

மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன்

இந்நிலையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கீர்த்தி சுரேஷ், மெஸ்ஸி என பெயர் எழுதப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும், அவருக்கு தலை வணங்குவதாக தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்தை இவர் பதிவு செய்த சில மணிநேரங்களிலேயே சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த புகைப்படம் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சாணிக்காயிதம்

சாணிக்காயிதம்

இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் சாணிக்காயிதம் படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லக்னோவில் படப்பிடிப்பு

லக்னோவில் படப்பிடிப்பு

ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருக்க தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேதாளம் தெலுங்கு ரீமேக்

வேதாளம் தெலுங்கு ரீமேக்

கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபுவுடன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் ரீமேக்காக உள்ள வேதாளம் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும், அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X