Nithya menon: ஏலேலோ ஐலசா.. மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்த நித்யா மேனன்!
சென்னை: நடிகை நித்யா மேனன் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள 70வது தேசிய விருதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து தனக்கு முதன்முதலில் நடிகர் தனுஷ்தான் போன் செய்து வாழ்த்துக்களை பகிர்ந்ததாக நித்யா மேனன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

நடிகை நித்யா மேனன்: நடிகை நித்யா மேனன் அடுத்தடுத்து கவனத்தை ஈர்க்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இவரை அடுத்தடுத்த படங்களில் பார்க்க முடிகிறது. தமிழிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 70வது தேசிய விருதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டி தூக்கியுள்ளார் நித்யா மேனன். இந்த படம் ரிலீசாகி தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.
தேசிய விருது அறிவிப்பு: இதுகுறித்து சமூக வலைதளத்தில் நீண்ட நெடிய பதிவு ஒன்றையும் நித்யா மேனன் வெளியிட்டுள்ளார். சிறந்த நடிப்பு என்பது உடலை ஏற்றி இறக்கி செயல்படுவது மட்டுமல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதியே தவிர, அதுவே சிறந்த நடிப்பாகாது என்றும் கூறியுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் தான் என நான்கு முக்கியமான கேரக்டர்கள் இருந்த நிலையில் இந்த வெற்றியை நாங்கள் நான்கு பேருமே சமமாக பகிர்ந்துக் கொள்வதே சரியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மீனவர்களுடன் வீடியோ: சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நித்யா மேனன், அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கடலிலிருந்து வலையை இழுக்கும் மீனவர்களுடன் இணைந்து நித்யா மேனனும் வலைக்கான கயிறை இழுக்கும்படியான வீடியோவை பகிர்ந்துள்ளார். மிகவும் உற்சாகமாக அவர் மீனவர்களுடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
விஜே52 படத்தில் நித்யா மேனன்: அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் நித்யா மேனன், அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து விஜே52 படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி மலையாளப் படம் ஒன்றில் நடித்திருந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள சூழலில் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் மிகவும் தனித்தன்மையானது என்று நித்யா மேனன் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











