Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நாட்டாமை' டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க..?
Recommended Video
சென்னை : 1994-ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபுள் ஆக்ஷனில் நடித்து வெளிவந்து கலக்கிய படம் 'நாட்டாமை'. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் ஆனது.
இந்தப் படத்தின் டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்த டீச்சர் கேரக்டரில் நடித்த ரக்ஷா அதன் பின் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார் ரக்ஷா. தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
நாட்டாமை டீச்சர்
'நாட்டாமை' படத்தில் வித்தியாசமான பின்னணி இசையோடு சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள் அல்லவா? அந்தப் படம் முழுவதும் நாட்டாமை டீச்சர் அனைவரின் கண் முன்னே வந்து போவார். அந்த டீச்சரின் உண்மையான பெயர் ரக்ஷா.
1992-ல் அறிமுகம்
1992-ல் ராமராஜன் நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த 'வில்லுப் பாட்டுக்காரன்' படத்தில் அறிமுகமானவர் ரக்ஷா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார்.
கிளாமர் நடிகை
பிறகு, ஹீரோயின் கதாபாத்திரம் தனக்கு ஒத்து வரவில்லை என கிளாமர் ரோலில் களம் இறங்கினார். அதன் பின்னர் தான் 'நாட்டாமை' மற்றும் 'ஜெமினி' படத்தில் 'ஓ போடு...' பாடல் ஆகியவற்றில் நடித்தார்.
தமிழில்
ரக்ஷா, 'நாட்டாமை', 'காதல் கோட்டை', 'அவ்வை சண்முகி', 'அந்த நாள்', 'நம்ம அண்ணாச்சி', 'புதல்வன்', 'நெஞ்சினிலே', 'ஜெமினி', 'காதல் சடுகுடு' உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் குறைந்தது
பின்னர் கிளாமர் ரோலில் சரியாக நிலைக்க முடியாத ரக்ஷாவிற்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்து. கடைசியாக தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான 'ஊலலலா' படத்தில் நடித்தார்.
தயாரிப்பாளரை மணந்தார்
பின்னர் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து போக, இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த தம்பதிக்கு தீக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இனி நடிக்கமாட்டேன்
மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்ஷா. மேலும், திருமணம் ஆகிவிட்டதால் இனிமேல் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் ரக்ஷா. அவரது புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.