»   »  என்னாச்சு நவ்யாவுக்கு?

என்னாச்சு நவ்யாவுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் பெருத்த அமைதி காக்கிறாராம்.

மலையாளத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நவ்யா நாயர். தமிழிலும்பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் அறிமுகமானார். முதல் படம் நன்றாக ஓடியும் கூடநவ்யாவுக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிய நவ்யா அங்கு மீண்டும் பிசியாகநடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் வந்தது சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமி. அட்டகாசமாக ஓடிய இப்படத்தின் வெற்றியும், படத்தால் ஏற்பட்ட சிலசர்ச்சைகளும் நவ்யாவுக்கு தமிழில் பெரிய பிரேக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து மளமளவென்று தமிழில் நிறையப் படங்களில் நடிக்கஆரம்பித்தார். அப்படி வேகமாக ஏறிக் கொண்டிருந்தபோதுதான் சின்னதாக ஒருதடங்கல் ஏற்பட்டுப் போனது.

சேரனுடன் ஜோடி போட்டு அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு வேகமாக போய்க்கொண்டிருந்த நவ்யாவின் மார்க்கெட் ராக்கெட் சடாரென கீழே இறங்கத்தொடங்கியது.

ஆடும் கூத்து என்ற படத்திலும் அதைத் தொடர்ந்து மாயக்கண்ணாடி படத்திலும்சேரனுடன் ஜோடியாக நடித்தார் நவ்யா. இதில் ஆடும் கூத்து ஒரு வழியாக முடிந்துவிட்டது. ஆனால் மாயக்கண்ணாடிதான் இன்னும் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சேரனுடைய படம் ஒன்று இவ்வளவு நாள் தயாரிப்பில் இருப்பது இதுவே முதல் முறைஎன்கிறார்கள். இப்போது மேட்டர் என்னவென்றால் நவ்யா நாயர் புதிதாக தன்னைத்தேடி வரும் படங்களை ஏற்க மறுத்து வருகிறாராம்.

தமிழிலும், மலையாளத்திலும் அவரிடம் இப்போது புதிதாக எந்தப் பட.ம்இல்லையாம். மாயக்கண்ணாடியே கதி என்று கிடக்கிறாராம். புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒரே படத்துடன் முடங்கிக் கிடந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பயமும் அவரிடம் இல்லையாம்.

மாயக்கண்ணாடியும் எப்போது முடியும் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தேஅந்தப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில்பணப் பிரச்சினை வந்தது. அப்புறம் அது சரியானது. பிறகு சேரனுக்கும்,நவ்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கசகச கிசுகிசு வெளியானது.பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் நவ்யாவைத் திட்டிய துணை நடிகை ஒருவரை சேரன்அடித்து விட்டார் என்று பஞ்சாயத்து கிளம்பியது. இந்த சம்பவத்திற்குப் பிறகுநவ்யாவும், சேரனும் படு நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்ற செய்தி சூடு பறக்க்ககிளம்பியது.

நவ்யாவுக்கு சேரன்தான் சாப்பாடு ஊட்டுகிறார் என்று கூட பேசிக் கொள்கிறார்கள்.இப்படி மாயக்கண்ணாடி குறித்த செய்திகள் பெரும் மாயமாகவே இருக்கிறது.

படம் எப்போது முடியும், நவ்யா நாயரின் தொடர் நிராகரிப்புக்கு என்ன காரணம்,சேரனுக்கும், அவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த செய்திகளுக்கு இருவரும்மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற பல ஏன் ஏன் களுக்கு எப்போது பதில்கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil