»   »  மம்தா பாய்ச்சல்!

மம்தா பாய்ச்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைப்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்என்று எரிச்சல்படுகிறார் நவ்யா நாயர்.

நடிகர்களுக்குப் போட்டியாக திரிஷாவின் ரசிகைகள் ஒன்று கூடி மன்றம் ஆரம்பித்துகளேபரம் செய்து வருவதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் புலம்பல் செய்தி.

பல நடிகைகள் திரிஷா ரசிகைகளின் அடங்கா ஓட்டத்தைப் பார்த்து பொறாமையுடன்திரிகிறார்கள்.

மும்தாஜுக்குக் கூட ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கள் சில ரசிகர்கள். அவர்களுக்குஅவ்வப்போது பிரியாணி விருந்தெல்லாம் போட்டார் மும்தாஜ். ஆனால்,பிரியாணியோடு தன்னிடம் துட்டு பறிப்பதிலும் அவர்கள் குறியாக இருந்ததால்மன்றத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டார்.

இந் நிலையில் ரசிகர் மன்றம் எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கோபமாகக்கூறியுள்ளார் நவ்யா நாயர் (யாரும் தனக்கு மன்றம் ஆரம்பிக்காததால் வந்து கோபமோஎன்னவோ).

நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பெதல்லாம் கொஞ்சம் ஓவரான செயல்.படங்களைப் பார்த்து எங்களை ரசியுங்கள், பாராட்டுங்கள். அது போதும். அதைவிட்டு விட்டு மன்றம் ஆரம்பிப்பது எல்லாம் தேவையில்லாத ஒன்று.பைத்தியக்காரத்தனம். நேரம், உழைப்பு, பணம்தான் தான் வேஸ்ட் என்கிறார் நவ்யா.

ஆமா, துணை நடிகையை அடிச்சிட்டிங்களாமே என்று பழைய மேட்டருக்குத்தாவினோம். அய்யா அது உண்மை இல்லை சாரே, அந்த நடிகை நான் நடித்துக்கொண்டிருந்தபோது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். சேரன் சார் போனை ஆப்செய்யுமாறு கூறினார். ஆனால் அதை அந்த நடிகை கேட்கவில்லை.

எனவே, தனது மேனேஜரைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணை வெளியே அனுப்புமாறுகூறினார். மற்றபடிநானோ, இல்லை சேரன் சாரோ அவரை அடிக்கவேயில்லை என்றார்நவ்யா.

சரி தங்கர் பச்சான் மறுபடியும் நடிக்க கூப்பிடுகிறாராமே, என்ன பதில் சொன்னீங்கஎன்று லேட்டஸ்டிநியூஸுக்கு மாறினோம். பள்ளிக்கூடம் என்ற படத்தை தங்கர்பச்சான்இயக்கவுள்ளார். அதன் கதை நன்றாக இருந்தால், எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம்மறுக்கமாட்டேன்.

ஆனால் அந்தப் படம் இப்போதைக்கு எடுக்கப்படுவது போல எனக்குத்தெரியவில்லை. மற்றபடி அதில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நான் கூற மாட்டேன்என்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil