»   »  அமெரிக்க நாயர்!

அமெரிக்க நாயர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நவ்யா நாயர் 20 நாட்கள் அமெரிக்காவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளாராம். இதனால் தற்போது நடித்து வரும் படங்களுக்கு 20 நாட்கள் லீவுபோட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தமிழில் ராசியில்லாத நடிகை என்ற பெயரைப் பெற்ற நவ்யா,சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்குப் பின்னர் காலில் சக்கரம் கட்டாத குறையாகபிசியான நடிகையாகிவிட்டார்.

அதிலும் சேரனுடன் ஜோடி சேர்ந்த பின்னர் அவரது வேகம் படு வேகமாக மாறியது.சேரனுடன் அடுத்தடுத்து 2 படங்களில் நடித்து வரும் நவ்யா, மூன்றாவதாகவும் ஒருபடத்தில் சேரனுடன் ஜோடி போடப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.

சமீபத்தில் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின்போது நடிக்க வந்த ஏர்ஹோஸ்டஸ் பிரியா,செல்போனில்பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக அவருடன் சண்டைக்குப் போனார்நவ்யா. பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள்

சேரன் இதை மறுத்து அறிக்கை விட்டார். ஆனால், இந்த விவகாரம் குறித்து நவ்யாஇதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக சூட்டிங், சர்ச்சை என படு பிசியாக இருக்கும் நவ்யா, படப்பிடிப்புகளுக்குஎல்லாம் சின்னதாக ஒரு பிரேக் விட்டு விட்டு அமெரிக்காவுக்குப் போகிறார்.

அங்கு 20 நாட்களுக்கு பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போகிறாராம். நவ்யா மிகச் சிறந்த பரதம் நாட்டியக் கலைஞர் என்பது உங்களுக்குத்தெரியும்தானே.

நவ்யாவுடன் சேர்ந்து ஆடப் போவது சந்திரமுகியின் காதலன் ரா..ரா.. வினீத். இவர் நடிகைபத்மினியின் சொந்தம் என்பதும் பத்மினி அமெரிக்காவில் பரத நாட்டிய பள்ளி நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.

பத்மினி குடும்பம் தான் இந்த பரதநாட்டிய டூருக்கு ஏற்பாடு செய்துள்ளது. பத்மினியில்ஆரம்பித்து நவ்யா வரை எல்லோருக்கும் சொந்த ஊர் கேரளா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்பே திட்டமிட்டு விட்ட புரோகிராம் இது என்பதால் 20 நாட்களுக்கு படப்பிடிப்புஇல்லாதவாறு முன்பே திட்டமிட்டு கால்ஷீட்களை அட்ஜெஸ்ட் செய்து விட்டாராம்நவ்யா.

பிசியான கோலிவுட் வாழ்க்கையிலிருந்து சற்றே விடுபட்டு, புத்துணர்ச்சியுடன்மீண்டும் வேலைக்குத் திரும்பஇது ஒரு நல்ல பிரேக் ஆக அமையும் என்கிறார் நவ்யாபுன்னகையுடன்.

ஆகஸ்ட் 24ம் தேதி அமெரிக்காவுக்கு வண்டி ஏறும் நவ்யா, செப்டம்பர் 12ம் தேதிதான்ஊருக்குத் திரும்புகிறாராம்.

அங்க போய் யாரையும் அடிச்சிடாதீங்க.. புஷ் ரொம்ப கோவக்காரரு..!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil