அம்மா வேஷம் தான்... ஆனா இளம் அம்மா என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன் - நவ்யா
இளம் அம்மா வேடம் என்பதால் த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் நவ்யா நாயர்.
தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த நவ்யா நாயர் 2010-ல் சந்தீஷ்மேனன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
மீண்டும் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார்.

மீண்டும் நடிப்பு
நவ்யாவுக்கு இப்போது 3 வயதில் மகன் இருக்கிறான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

த்ரிஷ்யம் கன்னட ரீமேக்
மோகன்லால் - மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் ஹிட்டான ‘திரிஷ்யம்' படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் நவ்யா நாயர் நடிக்கிறார். மீனா கேரக்டரில் அவர் நடிக்கிறார். 17 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

ரவிச்சந்திரன் ஜோடி
இதுகுறித்து நவ்யா நாயர் கூறுகையில், "கன்னடத்தில் தயாராகும் ‘த்ரிஷ்யம்' ரீமேக் படத்தை பி.வாசு இயக்குகிறார். மோகன்லால் வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கிறார். இதில் மீனா கேரக்டரில் நடிக்கும்படி என்னை அழைத்தபோது மறுக்க முடியவில்லை.

இளம் அம்மா
17 வயது பெண்ணுக்கு அம்மாவாகத்தான் நடிக்கிறேன். ஆனால் ஒரு இளம் அம்மாவாக, என் இப்போதைய தோற்றம் என்னவோ அப்படியே நடிக்கிறேன். கதையும் என் கேரக்டரும் வலுவாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











