கல்யாணம் பண்ணியாச்சு... குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிப்பில் களமிறங்கிய முன்னாள் ஹீரோயின்
கொச்சி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள முன்னாள் ஹீரோயினை, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர்.
தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர்.
சிறந்த நடனக் கலைஞரான அவர், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2010 ம் ஆண்டு சந்தோஷ்மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

மீண்டும் நடிப்பு
குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விடைபெற்றார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நவ்யா நாயர்.

உண்மைச் சம்பவம்
அவர் நடிக்கும் படத்துக்கு தீ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். நவ்யாவின் கம்பேக் படம் பற்றி வேறும் ஏதும் தெரிவிக்காத படக்குழு, இது உண்மைச் சம்பவ கதை என்று தெரிவித்துள்ளது.
மஞ்சு வாரியர்
இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று நடந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டியும் நடிகை மஞ்சுவாரியரும் சமூக வலைத்தளத்தில் நாளை வெளியிட உள்ளனர்.

புதிய கனவு
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நவ்யா நாயர், 'என் புதிய கனவு, என் திரைப்படம், உங்களுக்கும் எனக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிற அனல், பிரார்த்தனைகள், அன்பு, மகிழ்ச்சி, அமைதி...' என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











