ஒரே செல்ஃபியில் இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்... வைரலாகும் நவ்யா நாயர், மஞ்சு வாரியர் மகிழ்ச்சி போட்டோ
கொச்சி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ள நவ்யா நாயர், மஞ்சுவாரியருடன் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர்.
நடனக் கலைஞரான அவர், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2010 ம் ஆண்டு சந்தோஷ்மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

மீண்டும் நடிப்பு
குடும்ப வாழ்க்கைக்காக, சினிமாவில் இருந்து விடைபெற்றார் நவ்யா. இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார் நவ்யா நாயர். அவர் நடிக்கும் படத்துக்கு ஒருத்தீ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை வி.கே.பிரகாஷ் இயக்குகிறார்.

கம்பேக் படம்
நடிகை நவ்யா நாயரின் கம்பேக் படம் பற்றி வேறும் ஏதும் தெரிவிக்காத படக்குழு, இது உண்மைச் சம்பவ கதை என்று தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டியும் நடிகை மஞ்சுவாரியரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது வரவேற்பை பெற்றது.
View this post on InstagramHappiness ❤️❤️❤️love peace .. if someone makes u happy , make them happier ....
A post shared by Navya Nair (@navyanair143) on
செல்ஃபி புகைப்படம்
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார் நவ்யா நாயர். அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியருடன் இணைந்து அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், உங்களை யார் சந்தோஷப்படுத்தினார் களோ, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் நவ்யா.

சூப்பர் ஹீரோயின்கள்
மஞ்சுவாரியரும் நவ்யா நாயரும் தோழிகள். இருவரும் நட்பை தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இரண்டு சூப்பர் ஹீரோயின்களும் ஒரே செல்ஃபியில் என்றும், இப்போதும் இருவரும் சூப்பராக இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











