மீனா போய் நவ்யா

நவ்யா நாயருக்கு 2007 சுகமான ஆண்டாக இல்லை. அவர் நடித்த போன வருடம் வெளியான பெரும்பாலான படங்கள் சரியாக ஓடவில்லை. எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் குண்டைப் போட்டு விட்டன.
கடந்த ஆண்டு மலையாளத்தில் சுரேஷ்கோபியுடன் கிச்சாமணி எம்.பி.ஏ என்ற படத்தில் நடித்தார் நவ்யா. இப்படம் தோல்வி அடைந்தது. மம்முட்டியுடன் நடித்த அலிபாய் படமும் தோல்விப்படமானது. தமிழில் அவர் நடித்த மாயக்கண்ணாடி படமும் போணியாகவில்லை.
தற்போது தமிழில் நவ்யா 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஜெயராஜ் இயக்கத்தில் நடித்து வரும் சில நேரங்களில் படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
இதுதவிர 'வந்தனா புகழ்' ஸ்ரீகாந்த்துடன் எட்டப்பன் என்ற படமும் நவ்யா கையில் உள்ளது. இதுதவிர மலையாளத்தில் பாலாவுடன் எஸ்.எம்.எஸ். என்ற படத்தில் நடிக்கிறார். இது மட்டுமே இப்போதைக்கு அவரது கையில் உள்ள ஒரே மலையாளப் படம்.
இந்த நிலையில் புதிதாக ஒரு படம் வந்து சேர்ந்துள்ளது. மீண்டும் சுரேஷ் கோபியுடன் இப்படத்தில் இணைகிறார் நவ்யா. படத்திற்குப் பெயர் காவ்யம்.
முதலில் இப்படத்தில் மீனாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு நவ்யாவை புக் செய்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











