»   »  தமிழ் 1, மலையாளம் 3 அடுத்தடுத்து தமிழில் படங்கள் வரத் தொடங்கியிருப்பதால் சந்தோஷமாக உள்ளார் நவ்யா நாயர். லேட்டஸ்ட் வரவான அமிர்தம்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் குஷியுடன் கூறுகிறார்.கேரள இறக்குமதிகளில் ரொம்ப ஹோம்லியான முகம் நவ்யாவுக்கு மட்டுமே. சிதம்பரத்தில் ஒரு அப்பசாமியில் அவரது அழகானநடிப்பு முழுமையாக வெளிப்பட்டது. தங்கரின் டைரக்ஷன் உளியால் அழகாக செதுக்கப்பட்ட நடிப்புச் சிலையாக பரிமளித்தார்நவ்யா.இதில் கிடைத்த நல்ல பெயரால் பாசக் கிளிகளில் கலைஞரின் கதை, வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் நவ்யாவுக்குக் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அமிர்தம் படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.மேலும் ஆடும் கூத்து படத்தில் சேரனுடன் ஜோடியாக நடிக்கும் நவ்யா நாயர் மீண்டும் சேரனுடன் தீராத காதல் என்ற படத்தில்நடிக்கப் போகிறார். தீராத காதலை எழுதி, இயக்கப் போவது சேரனே தானாம்.தொடர்ந்து பெயர் வாங்கித் தரும் வகையிலான படங்கள் கிடைப்பது நவ்யாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.அதைவிட முக்கியமான விஷயம், நவ்யாவுக்கு தரப்படும் சம்பளம். அடுத்தடுத்து படங்கள் புக் ஆவதால் சம்பளத்தையும்உயர்த்திவிட்டார். கேட்டதை தட்டாமல் கொடுக்கிறார்கள் நம்மவர்களும்.இப்போது நவ்யாவுக்கு மலையாள சினிமாவைப் போல மூன்று மடங்கும் சம்பளம் தருகிறார்களாம் கோலிவுட்டில்.இதனால், முன்பெல்லாம் தமிழ் சினிமாவை கேரளத்தில போய் விமர்சனம் செய்து வந்த நவ்யாவின் போக்கில் இப்போதெல்லாம்பெரிய மாற்றம். கோலிவுட்டை ஏகத்துக்கும் பாராட்டுவதோடு, தமிழ் சினிமா ரசிகர்களையும் தூக்கி வைத்து பேட்டி தருகிறார்.என்னை ஜூனியர் சாவித்ரினு சொல்றாங்க என்று மலையாள பத்திரிக்கைகளுக்கு பேட்டி தந்துள்ளார். (யார் இவரை அப்படிச்சொன்னது?).தமிழில் எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் நான் கிளாமர் டால்இல்லை. இருந்தாலும் எனக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே கிரேட்.அது எனக்குப் பெருமையாக உள்ளது. ரொம்பக் கெளவரமாகவும் பேசுகிறார்கள். இது பெரிய மரியாதை. மலையாளத்தில் கூடஎனக்கு இவ்வளவு பெயர் கிடைத்ததில்லை. தமிழ் ரசிகர்கள் ரொம்ப அருமையானவர்கள் என்கிறார் நவ்யா. இனிமேல் மலையாளப் படங்களில் அதிகமாக நடிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் கிடையாது.மலையாளத்திலும் நடிப்பேன். தமிழிலும் நடிப்பேன். தமிழில் ஒரு படத்தில் நடித்தால், மலையாளத்தில் 3 படங்களில் நடிப்பேன்.(தமிழில் ஒரு படத்துக்கு கிடைக்கும் சம்பளம் 3 மலையாளப் படங்களில் நடித்தால் தான் கிடைக்கும்) என்கிறார் நவ்யா.பிட்டீஸ் 1:நடித்துக் கொண்டே பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறார் நவ்யா நாயர். தேர்வு வருவதால் சிறப்பு டியூசனும் வைத்துக் கொண்டுதீவிரமாகவே படிக்கிறாராம். நல்ல புள்ள.பிட்டீஸ் 2:தமிழில் சொந்தக் குரலில் தான் பேசுவேன் என்ற கண்டிசனுடன் தான் கால்ஷீட்டையே தருகிறார். தேசிய விருது கிடைக்கவேண்டுமானால் சொந்தக் குரலில் தான் பேசி நடிக்க வேண்டும். (ஓ, இதுவல்லோ மலையாளத்து வெவரம்...)

தமிழ் 1, மலையாளம் 3 அடுத்தடுத்து தமிழில் படங்கள் வரத் தொடங்கியிருப்பதால் சந்தோஷமாக உள்ளார் நவ்யா நாயர். லேட்டஸ்ட் வரவான அமிர்தம்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் குஷியுடன் கூறுகிறார்.கேரள இறக்குமதிகளில் ரொம்ப ஹோம்லியான முகம் நவ்யாவுக்கு மட்டுமே. சிதம்பரத்தில் ஒரு அப்பசாமியில் அவரது அழகானநடிப்பு முழுமையாக வெளிப்பட்டது. தங்கரின் டைரக்ஷன் உளியால் அழகாக செதுக்கப்பட்ட நடிப்புச் சிலையாக பரிமளித்தார்நவ்யா.இதில் கிடைத்த நல்ல பெயரால் பாசக் கிளிகளில் கலைஞரின் கதை, வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் நவ்யாவுக்குக் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அமிர்தம் படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.மேலும் ஆடும் கூத்து படத்தில் சேரனுடன் ஜோடியாக நடிக்கும் நவ்யா நாயர் மீண்டும் சேரனுடன் தீராத காதல் என்ற படத்தில்நடிக்கப் போகிறார். தீராத காதலை எழுதி, இயக்கப் போவது சேரனே தானாம்.தொடர்ந்து பெயர் வாங்கித் தரும் வகையிலான படங்கள் கிடைப்பது நவ்யாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.அதைவிட முக்கியமான விஷயம், நவ்யாவுக்கு தரப்படும் சம்பளம். அடுத்தடுத்து படங்கள் புக் ஆவதால் சம்பளத்தையும்உயர்த்திவிட்டார். கேட்டதை தட்டாமல் கொடுக்கிறார்கள் நம்மவர்களும்.இப்போது நவ்யாவுக்கு மலையாள சினிமாவைப் போல மூன்று மடங்கும் சம்பளம் தருகிறார்களாம் கோலிவுட்டில்.இதனால், முன்பெல்லாம் தமிழ் சினிமாவை கேரளத்தில போய் விமர்சனம் செய்து வந்த நவ்யாவின் போக்கில் இப்போதெல்லாம்பெரிய மாற்றம். கோலிவுட்டை ஏகத்துக்கும் பாராட்டுவதோடு, தமிழ் சினிமா ரசிகர்களையும் தூக்கி வைத்து பேட்டி தருகிறார்.என்னை ஜூனியர் சாவித்ரினு சொல்றாங்க என்று மலையாள பத்திரிக்கைகளுக்கு பேட்டி தந்துள்ளார். (யார் இவரை அப்படிச்சொன்னது?).தமிழில் எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் நான் கிளாமர் டால்இல்லை. இருந்தாலும் எனக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே கிரேட்.அது எனக்குப் பெருமையாக உள்ளது. ரொம்பக் கெளவரமாகவும் பேசுகிறார்கள். இது பெரிய மரியாதை. மலையாளத்தில் கூடஎனக்கு இவ்வளவு பெயர் கிடைத்ததில்லை. தமிழ் ரசிகர்கள் ரொம்ப அருமையானவர்கள் என்கிறார் நவ்யா. இனிமேல் மலையாளப் படங்களில் அதிகமாக நடிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் கிடையாது.மலையாளத்திலும் நடிப்பேன். தமிழிலும் நடிப்பேன். தமிழில் ஒரு படத்தில் நடித்தால், மலையாளத்தில் 3 படங்களில் நடிப்பேன்.(தமிழில் ஒரு படத்துக்கு கிடைக்கும் சம்பளம் 3 மலையாளப் படங்களில் நடித்தால் தான் கிடைக்கும்) என்கிறார் நவ்யா.பிட்டீஸ் 1:நடித்துக் கொண்டே பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறார் நவ்யா நாயர். தேர்வு வருவதால் சிறப்பு டியூசனும் வைத்துக் கொண்டுதீவிரமாகவே படிக்கிறாராம். நல்ல புள்ள.பிட்டீஸ் 2:தமிழில் சொந்தக் குரலில் தான் பேசுவேன் என்ற கண்டிசனுடன் தான் கால்ஷீட்டையே தருகிறார். தேசிய விருது கிடைக்கவேண்டுமானால் சொந்தக் குரலில் தான் பேசி நடிக்க வேண்டும். (ஓ, இதுவல்லோ மலையாளத்து வெவரம்...)

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்து தமிழில் படங்கள் வரத் தொடங்கியிருப்பதால் சந்தோஷமாக உள்ளார் நவ்யா நாயர். லேட்டஸ்ட் வரவான அமிர்தம்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாகவும் குஷியுடன் கூறுகிறார்.

கேரள இறக்குமதிகளில் ரொம்ப ஹோம்லியான முகம் நவ்யாவுக்கு மட்டுமே. சிதம்பரத்தில் ஒரு அப்பசாமியில் அவரது அழகானநடிப்பு முழுமையாக வெளிப்பட்டது. தங்கரின் டைரக்ஷன் உளியால் அழகாக செதுக்கப்பட்ட நடிப்புச் சிலையாக பரிமளித்தார்நவ்யா.

இதில் கிடைத்த நல்ல பெயரால் பாசக் கிளிகளில் கலைஞரின் கதை, வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் நவ்யாவுக்குக் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அமிர்தம் படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு.

மேலும் ஆடும் கூத்து படத்தில் சேரனுடன் ஜோடியாக நடிக்கும் நவ்யா நாயர் மீண்டும் சேரனுடன் தீராத காதல் என்ற படத்தில்நடிக்கப் போகிறார். தீராத காதலை எழுதி, இயக்கப் போவது சேரனே தானாம்.


தொடர்ந்து பெயர் வாங்கித் தரும் வகையிலான படங்கள் கிடைப்பது நவ்யாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

அதைவிட முக்கியமான விஷயம், நவ்யாவுக்கு தரப்படும் சம்பளம். அடுத்தடுத்து படங்கள் புக் ஆவதால் சம்பளத்தையும்உயர்த்திவிட்டார். கேட்டதை தட்டாமல் கொடுக்கிறார்கள் நம்மவர்களும்.

இப்போது நவ்யாவுக்கு மலையாள சினிமாவைப் போல மூன்று மடங்கும் சம்பளம் தருகிறார்களாம் கோலிவுட்டில்.

இதனால், முன்பெல்லாம் தமிழ் சினிமாவை கேரளத்தில போய் விமர்சனம் செய்து வந்த நவ்யாவின் போக்கில் இப்போதெல்லாம்பெரிய மாற்றம். கோலிவுட்டை ஏகத்துக்கும் பாராட்டுவதோடு, தமிழ் சினிமா ரசிகர்களையும் தூக்கி வைத்து பேட்டி தருகிறார்.


என்னை ஜூனியர் சாவித்ரினு சொல்றாங்க என்று மலையாள பத்திரிக்கைகளுக்கு பேட்டி தந்துள்ளார். (யார் இவரை அப்படிச்சொன்னது?).

தமிழில் எனக்கு இவ்வளவு பெரிய பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இத்தனைக்கும் நான் கிளாமர் டால்இல்லை. இருந்தாலும் எனக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே கிரேட்.

அது எனக்குப் பெருமையாக உள்ளது. ரொம்பக் கெளவரமாகவும் பேசுகிறார்கள். இது பெரிய மரியாதை. மலையாளத்தில் கூடஎனக்கு இவ்வளவு பெயர் கிடைத்ததில்லை. தமிழ் ரசிகர்கள் ரொம்ப அருமையானவர்கள் என்கிறார் நவ்யா.

இனிமேல் மலையாளப் படங்களில் அதிகமாக நடிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் கிடையாது.மலையாளத்திலும் நடிப்பேன். தமிழிலும் நடிப்பேன். தமிழில் ஒரு படத்தில் நடித்தால், மலையாளத்தில் 3 படங்களில் நடிப்பேன்.(தமிழில் ஒரு படத்துக்கு கிடைக்கும் சம்பளம் 3 மலையாளப் படங்களில் நடித்தால் தான் கிடைக்கும்) என்கிறார் நவ்யா.


பிட்டீஸ் 1:

நடித்துக் கொண்டே பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறார் நவ்யா நாயர். தேர்வு வருவதால் சிறப்பு டியூசனும் வைத்துக் கொண்டுதீவிரமாகவே படிக்கிறாராம். நல்ல புள்ள.

பிட்டீஸ் 2:

தமிழில் சொந்தக் குரலில் தான் பேசுவேன் என்ற கண்டிசனுடன் தான் கால்ஷீட்டையே தருகிறார். தேசிய விருது கிடைக்கவேண்டுமானால் சொந்தக் குரலில் தான் பேசி நடிக்க வேண்டும். (ஓ, இதுவல்லோ மலையாளத்து வெவரம்...)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil