நவ்யாவுக்கு தங்கர் கொடுத்த சூடு! தங்கரின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பின் போது பல சூடான காட்சிகள் அரங்கேறியுள்ளதாம். அவை படம்தொடர்பான காட்சிகள் இல்லை என்பது தான் அதில் குறிப்பிடத்தக்க விசேஷம். தங்கர்பச்சானின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. இதில்அப்பாசாமி கேரக்டரில் தங்கரே நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நவ்யா நாயர் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ரெண்டு புள்ளைகளும் உண்டு. படப்பிடிப்பு சிதம்பரத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில்எந்தப் பிரச்சினையும் செய்யாமல் நடித்து வந்தாராம் நவ்யா. ஆனால் இப்போது தங்கரை கடுப்படிக்கும் வகையில் அவர்நடந்து கொள்கிறாராம். தங்கர் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டவே, எல்லாம் சொல்லித் தானே புக் செய்தேன், இப்போதுநடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று கோபப்பட்டுள்ளார் தங்கர். பிறகு சமாதானமாகி நடித்துக் கொடுத்தார் நவ்யா. சில நாட்கள் போனது. இப்போது சம்பளப் பணம் முழுவதையும் உடனே கொடுத்தால் தான் தொடர்ந்து நடிப்பேன் என்றுகூறியுள்ளார். ஏற்கனவே நவ்யா மேல் கடுப்பில் இருந்த தங்கருக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இடம் பொருள், ஏவல் பார்க்காமல் நவ்யாவுக்கு செம டோஸ் கொடுத்தாராம் தங்கர். படப்பிடிப்பிலேயே தங்கர் கடுமையாக திட்டியதால் நொந்து போனார் நவ்யா. அத்தோடு நில்லாத தங்கர், நவ்யாவின் பாக்கிசம்பளத்தை அப்போதே செட்டில் செய்து விட்டாராம். இதனால் வெட்கப்பட்டுப் போன நவ்யா, சாரி சார் என்று சொல்லி விட்டுஅடக்கம், ஒடுக்கமாக நடித்து வருகிறாராம். நவ்யாவின் இழுத்தடிப்புக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். படத்தின் டைட்டிலில் உனது பெயரை நவ்யா என்று தான்போடுவேன். நாயர் எல்லாம் டைட்டிலில் வர மாட்டார் என்று நவ்யாவைப் புக் செய்தபோது கூறினாராம் தங்கர். அதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம் நவ்யா. இருப்பினும் நல்ல கதை என்பதாலும், தமிழில் தனக்கு பிரேக்கிடைக்கும் என்பதாலும் சரி என்று கூறினாராம். இருப்பினும் தனது அடையாளமாக உள்ள நாயரை வெட்டி விடுவேன் என்று தங்கர் கூறியதால் அதை நினைத்துக் கொண்டேஅரைகுறையாக நடித்து வந்தாராம். இதனால் தான் தங்கர் கடுப்பாகி விட்டாராம். எப்படியோ அப்பாசாமி நல்லா வந்தா சரி!

By Staff

தங்கரின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பின் போது பல சூடான காட்சிகள் அரங்கேறியுள்ளதாம். அவை படம்தொடர்பான காட்சிகள் இல்லை என்பது தான் அதில் குறிப்பிடத்தக்க விசேஷம்.

தங்கர்பச்சானின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி. இதில்அப்பாசாமி கேரக்டரில் தங்கரே நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நவ்யா நாயர் நடிக்கிறார்.


கதைப்படி அவருக்கு ரெண்டு புள்ளைகளும் உண்டு. படப்பிடிப்பு சிதம்பரத்தில் படு வேகமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில்எந்தப் பிரச்சினையும் செய்யாமல் நடித்து வந்தாராம் நவ்யா. ஆனால் இப்போது தங்கரை கடுப்படிக்கும் வகையில் அவர்நடந்து கொள்கிறாராம்.

தங்கர் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிப்பதற்கு அவர் தயக்கம் காட்டவே, எல்லாம் சொல்லித் தானே புக் செய்தேன், இப்போதுநடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று கோபப்பட்டுள்ளார் தங்கர். பிறகு சமாதானமாகி நடித்துக் கொடுத்தார் நவ்யா.

சில நாட்கள் போனது. இப்போது சம்பளப் பணம் முழுவதையும் உடனே கொடுத்தால் தான் தொடர்ந்து நடிப்பேன் என்றுகூறியுள்ளார். ஏற்கனவே நவ்யா மேல் கடுப்பில் இருந்த தங்கருக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இடம் பொருள், ஏவல் பார்க்காமல் நவ்யாவுக்கு செம டோஸ் கொடுத்தாராம் தங்கர்.

படப்பிடிப்பிலேயே தங்கர் கடுமையாக திட்டியதால் நொந்து போனார் நவ்யா. அத்தோடு நில்லாத தங்கர், நவ்யாவின் பாக்கிசம்பளத்தை அப்போதே செட்டில் செய்து விட்டாராம். இதனால் வெட்கப்பட்டுப் போன நவ்யா, சாரி சார் என்று சொல்லி விட்டுஅடக்கம், ஒடுக்கமாக நடித்து வருகிறாராம்.


நவ்யாவின் இழுத்தடிப்புக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். படத்தின் டைட்டிலில் உனது பெயரை நவ்யா என்று தான்போடுவேன். நாயர் எல்லாம் டைட்டிலில் வர மாட்டார் என்று நவ்யாவைப் புக் செய்தபோது கூறினாராம் தங்கர்.

அதற்கு முதலில் ஒப்புக் கொள்ளவில்லையாம் நவ்யா. இருப்பினும் நல்ல கதை என்பதாலும், தமிழில் தனக்கு பிரேக்கிடைக்கும் என்பதாலும் சரி என்று கூறினாராம்.

இருப்பினும் தனது அடையாளமாக உள்ள நாயரை வெட்டி விடுவேன் என்று தங்கர் கூறியதால் அதை நினைத்துக் கொண்டேஅரைகுறையாக நடித்து வந்தாராம். இதனால் தான் தங்கர் கடுப்பாகி விட்டாராம்.

எப்படியோ அப்பாசாமி நல்லா வந்தா சரி!

Read more about: navya vs thangar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X