»   »  சத்யராஜுக்கு நவ்யா ஸாரி !

சத்யராஜுக்கு நவ்யா ஸாரி !

Subscribe to Oneindia Tamil
நடிகை நவ்யா நாயர் பி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறியுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நவ்யா நாயர் இப்போது தமிழில்அதிக அளவில் நடித்து வருகிறார். நடித்துக் கொண்டே பி.ஏ. படப்படிப்பையும் படித்துவந்தார்.

கல்லூரியில் போய் படிக்க முடியாத நிலை இருந்ததால் டியூஷன் வைத்து படித்துவந்தார். சமீபத்தில் கடும் காய்ச்சலுக்கு இடையே பரீட்சையும் எழுதினார்.

இதேபோல இன்னொரு பரீட்சையின்போது விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டி வந்தது. விழாவுக்குப் போய் விட்டு வந்து பரீட்சையை எழுதிமுடித்தாராம்.

இப்படிக் கஷ்டப்பட்டுப் படித்து பரீட்சை எழுதிய நவ்யா நாயர் இப்போது தேர்வில்முதல் வகுப்பில் பாஸ் செய்துள்ளாராம்.

கஷ்டப்பட்டு எழுதினேன். முதல் வகுப்பில் தேறியுள்ளது சந்தோஷமாக இருக்கிறதுஎன்கிறார் நவ்யா.

இப்போது சேரனுடன் நவ்யா நடித்து வரும் ஆடும் கூத்து படம் சந்திரமுகியைப் போலவே திகில் படமாம். இதில்நவ்யா கலக்கி வருவதாக சேரனே பாராட்டியிருக்கிறார்.

இதற்கிடையே சத்யராஜுக்கு ஜோடியாக வெளுத்துக் கட்டு என்ற படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை நவ்யா மறுத்திருக்கிறார். காரணம், அமெரிக்காவில் பரத நாட்டியநிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போகப் போகிறாராம் நவ்யா.

இதனால் ஜூலை முதல் செப்டம்பர் வரை பெரும்பாலும் அமெரிக்காவிலேயேதங்கியிருக்கவும் போகிறார். சத்யராஜ் படத்துக்கு அந்த நேரத்தில் கால்ஷீட் கேட்டதால்ஸாரி சொல்லிவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil