மலையேறிய நவ்யா நவ்யா நாயரும் மலையேறிவிட்டார். எல்லாம் சம்பள விஷயத்தில் தான்.அழகிய தீயே படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மலையாளத்து வண்டு நவ்யா நாயர். மிகவும் அமைதியானவர், நல்ல நடிகைஎன்ற பெயர் எடுத்தார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நவ்யாவுக்கு, அழகிய தீயே நல்லஎன்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது.அங்கு படத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு முதல் படத்திலேயே அதைப் போலபல மடங்கு கொட்டித் தந்தார்கள் கோலிவுட்டில்.அழகிய தீயேவைத் தொடர்ந்து நவ்யாவுக்கு படம் எதுவும் வரவில்லை. இந்த நேரத்தில்தான் சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிக்காக பல நடிகைகளை அணுகிப் பார்த்து, அனைவருமே குழந்தைகளுக்கு அம்மாவாய் நடிக்க மறுத்ததால்,நவ்யாவை அணுகினார் தங்கர்.கதைப்படி நவ்யாவுக்கு 2 குழந்தைகள். வேறு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.முதலில் ஒழுங்காக ஒத்துழைத்தவர், படப்பிடிப்பு இறுதி நிலையை அடைந்தபோது தலைக்கனம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.முதல் படத்தில் நவ்யா வாங்கியதைவிட இரு மடங்கு ஊதியம் கொடுத்தார் தங்கர்பச்சான். ஆனால், நவ்யாவின் ஹேர்டிரஸ்ஸருக்கு 600 ரூபாய் பாக்கி வைத்துவிட்டதாம் தயாரிப்பு நிர்வாகம்.இதனால் கடைசி நேரத்தில் சூட்டிங்குக்கு வராமல் போன நவ்யாவை, படப்பிடிப்பு முடிந்ததும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் தங்கர்பச்சான். ஆனால், அதற்காக ஓவரான சில வார்த்தைகளை பயன்படுத்தினார் தங்கர்.இதனால் சிக்கலாகி நடிகர் சங்கம் வரை சென்று மன்னிப்பும் கேட்டார் தங்கர்.இந்தக் குழப்பங்களுக்கு இடையே வெளி வந்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம் நன்றாக ஓடி வருகிறது. படம் வசூலைக்குவித்து வருவதாலும் அதில் நவ்யாவின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி ஓடஆரம்பித்திருக்கிறார்கள். கால்ஷீட் கேட்டு வருபவர்களை கேரளத்து டீ தந்து வரவேற்கும் நவ்யா கதையைக் கேட்டு முடித்ததும் சம்பளம் குறித்துப் பேசதொடங்குகிறாராம். அதைக் கேட்டவுடனேயே தண்ணீர் தாகம் எடுத்துவிடுகிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.அப்படி அப்படி எம்புட்டுதான் கேட்கிறார் நவ்யா என்கிறீர்களா?. அதிகமில்லை, 20 லட்சம்தான்.ரெண்டு படம் நடிச்சதுக்கே இம்புட்டுன்னா, இன்னும் 2 படத்தை முடிச்சுட்டா ரூ. 1 கோடி கேட்பாரோ.நவ்யாவுக்கு மலையாளப் படங்களில் நடிக்கத் தரப்படும் அதிகபட்ச சம்பளமே ரூ. 4 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தசம்பளம் கூட தமிழில் சக்ஸஸ் ஆகிவிட்டதால் தரப்படும் சம்பளமாம். இல்லாவிட்டால் ரூ. 2 லட்சத்திலேயே தான் தேங்கிக்கிடந்திருப்பாராம்.இவ்வளவு கேட்கிறார் என்பதற்காக தயாரிப்பாளர்கள் வேறு ஆளையா தேடப் போகிறார்கள். போய் அங்கே தானேகொட்டுவார்கள்.அந்த வகையில் ரூ. 20 லட்சத்தை வாங்கிக் கொண்டு நவ்யா புக் ஆகியுள்ள அடுத்த படம் பேரவை. இதில் இவருக்கு ஜோடிரமணா.நவ்யா விஷயத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம், கேரளத்து சிட்டாக இருந்தாலும் மிக அழகாக தமிழ் பேசுகிறார். அத்தோடுதமிழ் சினிமாவில் சொந்தக் குரலிலேயே பேசவும் ஆசைப்படுகிறார். ஆனால், இதுவரை எந்த டைரக்டரும் அந்த வாய்ப்பைத்தரவில்லை.

By Staff

நவ்யா நாயரும் மலையேறிவிட்டார். எல்லாம் சம்பள விஷயத்தில் தான்.

அழகிய தீயே படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மலையாளத்து வண்டு நவ்யா நாயர். மிகவும் அமைதியானவர், நல்ல நடிகைஎன்ற பெயர் எடுத்தார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நவ்யாவுக்கு, அழகிய தீயே நல்லஎன்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அங்கு படத்துக்கு ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு முதல் படத்திலேயே அதைப் போலபல மடங்கு கொட்டித் தந்தார்கள் கோலிவுட்டில்.

அழகிய தீயேவைத் தொடர்ந்து நவ்யாவுக்கு படம் எதுவும் வரவில்லை. இந்த நேரத்தில்தான் சிதம்பரத்தில் ஒருஅப்பாசாமிக்காக பல நடிகைகளை அணுகிப் பார்த்து, அனைவருமே குழந்தைகளுக்கு அம்மாவாய் நடிக்க மறுத்ததால்,நவ்யாவை அணுகினார் தங்கர்.


கதைப்படி நவ்யாவுக்கு 2 குழந்தைகள். வேறு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

முதலில் ஒழுங்காக ஒத்துழைத்தவர், படப்பிடிப்பு இறுதி நிலையை அடைந்தபோது தலைக்கனம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

முதல் படத்தில் நவ்யா வாங்கியதைவிட இரு மடங்கு ஊதியம் கொடுத்தார் தங்கர்பச்சான். ஆனால், நவ்யாவின் ஹேர்டிரஸ்ஸருக்கு 600 ரூபாய் பாக்கி வைத்துவிட்டதாம் தயாரிப்பு நிர்வாகம்.

இதனால் கடைசி நேரத்தில் சூட்டிங்குக்கு வராமல் போன நவ்யாவை, படப்பிடிப்பு முடிந்ததும் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் தங்கர்பச்சான். ஆனால், அதற்காக ஓவரான சில வார்த்தைகளை பயன்படுத்தினார் தங்கர்.


இதனால் சிக்கலாகி நடிகர் சங்கம் வரை சென்று மன்னிப்பும் கேட்டார் தங்கர்.

இந்தக் குழப்பங்களுக்கு இடையே வெளி வந்த சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம் நன்றாக ஓடி வருகிறது. படம் வசூலைக்குவித்து வருவதாலும் அதில் நவ்யாவின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி ஓடஆரம்பித்திருக்கிறார்கள்.

கால்ஷீட் கேட்டு வருபவர்களை கேரளத்து டீ தந்து வரவேற்கும் நவ்யா கதையைக் கேட்டு முடித்ததும் சம்பளம் குறித்துப் பேசதொடங்குகிறாராம். அதைக் கேட்டவுடனேயே தண்ணீர் தாகம் எடுத்துவிடுகிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.

அப்படி அப்படி எம்புட்டுதான் கேட்கிறார் நவ்யா என்கிறீர்களா?. அதிகமில்லை, 20 லட்சம்தான்.


ரெண்டு படம் நடிச்சதுக்கே இம்புட்டுன்னா, இன்னும் 2 படத்தை முடிச்சுட்டா ரூ. 1 கோடி கேட்பாரோ.

நவ்யாவுக்கு மலையாளப் படங்களில் நடிக்கத் தரப்படும் அதிகபட்ச சம்பளமே ரூ. 4 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தசம்பளம் கூட தமிழில் சக்ஸஸ் ஆகிவிட்டதால் தரப்படும் சம்பளமாம். இல்லாவிட்டால் ரூ. 2 லட்சத்திலேயே தான் தேங்கிக்கிடந்திருப்பாராம்.

இவ்வளவு கேட்கிறார் என்பதற்காக தயாரிப்பாளர்கள் வேறு ஆளையா தேடப் போகிறார்கள். போய் அங்கே தானேகொட்டுவார்கள்.

அந்த வகையில் ரூ. 20 லட்சத்தை வாங்கிக் கொண்டு நவ்யா புக் ஆகியுள்ள அடுத்த படம் பேரவை. இதில் இவருக்கு ஜோடிரமணா.

நவ்யா விஷயத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம், கேரளத்து சிட்டாக இருந்தாலும் மிக அழகாக தமிழ் பேசுகிறார். அத்தோடுதமிழ் சினிமாவில் சொந்தக் குரலிலேயே பேசவும் ஆசைப்படுகிறார். ஆனால், இதுவரை எந்த டைரக்டரும் அந்த வாய்ப்பைத்தரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X