நவ்யா-சேரன் ஆடும் கூத்து... அழகியே தீயேவில் அழகாக அறிமுகமான நவ்யா நாயரும் கிளாமர் போட்டியில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.சமீபத்தில் தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நன்றாக நடித்தும் கூட 500 ரூபாய்க்காக கலாட்டா செய்ததாலும் சம்பளத்தைதாறுமாறாக உயர்த்தியதாலும் நவ்யாவின் கையில் அவ்வளவாகப் படங்கள் இல்லை.இப்போது பாசக் கிளிகள் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதில் கொஞ்சம் கவர்ச்சி காட்டும் வேடம். ஆனால் வேண்டியதற்கும்மேலாகவே கிளாமர் காட்டுகிறாராம் நவ்யா.சம்பளத்தை மட்டும் ரூ. 20 லட்சத்துக்கு கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நவ்யா உடைகளை வேண்டுமானால்குறைத்துக் கொள்கிறாராம். ஒரு நல்ல நடிகை இப்படி கிளாமர் கிணற்றுக்குள் குதித்தது சோகம் தான் என்று கோடம்பாக்கம் கவலைப்பட்ட நிலையில் நவ்யாவுக்கு நல்லநியூசாக புதிய படம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்கப் போவது மலையாளத்தின் மிகச் சிறந்த இயக்குனரான டிவி சந்திரன்.இவர் தேசிய விருது பெற்ற டைரக்டர்.மம்மூட்டியை வைத்து பொந்தன் மாடா என்ற படத்தை இயக்கிய அவருக்கும் தனக்கும் தேசிய விருது பெற்ற இவர் இயக்கிய பாடம் ஒன்ணுஒரு விலாபம் என்ற படத்தில் நடித்த மீரா ஜாஸ்மீனுக்கும் கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.இப்படிப்பட்ட சீரிய இயக்குனரின் டைரக்டஷனின் ஹீரோவாக நடிக்கப் போகிறார் இயக்குனர் சேரன். அவருக்கு ஜோடியாகத்தான்நவ்யா நாயர் நடிக்கிறார்.கிருபா பிலிம்ஸ் என்ற நிறுவனம் இயக்கும் ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் காலடி எடுத்து வைக்கிறார் சந்திரன்.மலையாளத்தில் பல வெற்றப் படங்களைத் தயாரித்த நிறுவனம் இது. இதில் நவ்யா, சேரன் தவிர பிரகாஷ்ராஜ், சரண்யா, கலாபவன் மணி மற்றும் மேலும் பல மலையாள முகங்கள் நடிக்கின்றன. இசைஇளையராஜா.படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் மலையாளிகளே. (அதானே.. தமிழ்ல படம் எடுத்தாலும் அதனால் பலன் பெறப்போவது கேரளத்தவரே).வெட்டியாய் சுவிஸ், கனடா என்று போகாமல் படப்பிடிப்பை நாகர்கோவில் பக்கமாய் குறைந்த செலவில் நடத்த இருக்கிறார்கள்.கேரளாவையும் பேக் கிரவுண்டாக வைத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் அங்கு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.அதிலிருந்து சேரனுக்கு என அங்கு தனி மசுவு கிடைக்க ஆரம்பித்துவிட்டது.இந் நிலையில் சேரனை வைத்து தமிழில் எடுத்தாலும் இந்தப் படம் கேரளத்திலும் நல்ல வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்இயக்குனர் சந்திரன்.ஓ, இதுவல்லோ வெவரம்...

By Staff

அழகியே தீயேவில் அழகாக அறிமுகமான நவ்யா நாயரும் கிளாமர் போட்டியில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

சமீபத்தில் தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நன்றாக நடித்தும் கூட 500 ரூபாய்க்காக கலாட்டா செய்ததாலும் சம்பளத்தைதாறுமாறாக உயர்த்தியதாலும் நவ்யாவின் கையில் அவ்வளவாகப் படங்கள் இல்லை.

இப்போது பாசக் கிளிகள் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதில் கொஞ்சம் கவர்ச்சி காட்டும் வேடம். ஆனால் வேண்டியதற்கும்மேலாகவே கிளாமர் காட்டுகிறாராம் நவ்யா.

சம்பளத்தை மட்டும் ரூ. 20 லட்சத்துக்கு கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நவ்யா உடைகளை வேண்டுமானால்குறைத்துக் கொள்கிறாராம்.


ஒரு நல்ல நடிகை இப்படி கிளாமர் கிணற்றுக்குள் குதித்தது சோகம் தான் என்று கோடம்பாக்கம் கவலைப்பட்ட நிலையில் நவ்யாவுக்கு நல்லநியூசாக புதிய படம் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்கப் போவது மலையாளத்தின் மிகச் சிறந்த இயக்குனரான டிவி சந்திரன்.இவர் தேசிய விருது பெற்ற டைரக்டர்.

மம்மூட்டியை வைத்து பொந்தன் மாடா என்ற படத்தை இயக்கிய அவருக்கும் தனக்கும் தேசிய விருது பெற்ற இவர் இயக்கிய பாடம் ஒன்ணுஒரு விலாபம் என்ற படத்தில் நடித்த மீரா ஜாஸ்மீனுக்கும் கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இப்படிப்பட்ட சீரிய இயக்குனரின் டைரக்டஷனின் ஹீரோவாக நடிக்கப் போகிறார் இயக்குனர் சேரன். அவருக்கு ஜோடியாகத்தான்நவ்யா நாயர் நடிக்கிறார்.

கிருபா பிலிம்ஸ் என்ற நிறுவனம் இயக்கும் ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் காலடி எடுத்து வைக்கிறார் சந்திரன்.மலையாளத்தில் பல வெற்றப் படங்களைத் தயாரித்த நிறுவனம் இது.


இதில் நவ்யா, சேரன் தவிர பிரகாஷ்ராஜ், சரண்யா, கலாபவன் மணி மற்றும் மேலும் பல மலையாள முகங்கள் நடிக்கின்றன. இசைஇளையராஜா.

படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் மலையாளிகளே. (அதானே.. தமிழ்ல படம் எடுத்தாலும் அதனால் பலன் பெறப்போவது கேரளத்தவரே).

வெட்டியாய் சுவிஸ், கனடா என்று போகாமல் படப்பிடிப்பை நாகர்கோவில் பக்கமாய் குறைந்த செலவில் நடத்த இருக்கிறார்கள்.

கேரளாவையும் பேக் கிரவுண்டாக வைத்து சேரன் இயக்கிய ஆட்டோகிராப் அங்கு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.அதிலிருந்து சேரனுக்கு என அங்கு தனி மசுவு கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

இந் நிலையில் சேரனை வைத்து தமிழில் எடுத்தாலும் இந்தப் படம் கேரளத்திலும் நல்ல வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்இயக்குனர் சந்திரன்.

ஓ, இதுவல்லோ வெவரம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X