நவ்யாமிர்தம்! ஒழுங்குப் புள்ளையாக கருதப்பட்ட நவ்யா நாயரும் இப்போது கிளாமரில் கலங்கடிக்க ஆரம்பித்திருக்கிறார்.நவ்யா நாயரை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு முந்தைய நவ்யா, பிந்தைய நவ்யா என ரெண்டாகப் பிரிக்கலாம்.அப்பாசாமிக்கு முன்பு நவ்யா நாயர் தமிழில் அதிகம் பிரபலமாகவில்லை. தேடித்தான் அவரைப் பிடிக்க வேண்டியிருந்தது. தமிழ்கூறும் நில்லுலகின் ரசிகர்கள் நவ்யாவை அதிகம் ரசிக்கவில்லை.ஆனால் அப்பாசாமி வந்து அவரது திரையுலக அத்தியாயத்தை ஒரு புரட்டு புரட்டிப் போட்டு விட்டது. இப்போது நவ்யாவின்கையில் நிறையத் தமிழ்ப் படங்கள். அப்பாசாமியின் வெற்றி மட்டும் இதற்குக் காரணமல்ல, தங்கரின் வசவுகளால் கிடைத்த ப்ரீவிளம்பரமும் ஒரு முக்கியக் காரணம். அப்பாசாமியில் குடும்பப் பெண்ணாய் நடித்ததன் பலனாக இப்போது கருணாநிதியின் கதை- வசனத்தில் உருவாகியுள்ளபாசக்கிளிகள் படத்தில் பிரபு, முரளிக்கு தங்கையாக கலக்கல் வேடத்தில் நடித்துள்ளார் நவ்யா. இந்தப் படத்திலும் கொஞ்சமேகிளாமர் காட்டினாலும் அப்பாசாமி நவ்யாவையே காணலாம்.ஆனால் இப்போது மேட்டர் அதுவல்ல, நவ்யாவின் கிளாமர் கலக்கலில் உருவாகி வரும் அமிர்தம் படத்தில் அவரது கேரக்டர்பற்றித்தான். பாசக்கிளிகளுக்கு முன்பாகவே, அப்பாசாமிக்கு முன்பாகவே நவ்யா ஒத்துக் கொண்ட படம்தான் அமிர்தம்.ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த அமிர்தம் படத்தின் ஷூட்டிங், நவ்யாவின் திடீர் பிரபலத்தால் முடுக்கி விடப்பட்டு ஒரு வழியாகமுடிவடைந்துள்ளது. படம் கிராமத்து கர்நாடக இசைக் குடும்பத்தின் கதை தான் என்றாலும் கிளாமருக்குப் பஞ்சமில்லாமல் எடுத்திருக்கிறார்கள். (படம்ஓடணுமே..) இந்தப் படத்தில் நவ்யா இரண்டு பாட்டுக்களில் கிளாமரில் விளையாடியிருக்கும் நவ்யாவைப் பார்க்கும் ரசிகர்கள்,அப்பாவி...ஸாரி அப்பாசாமி நவ்யாவா இது என்று ஆச்சரியப்படப் போகிறார்களாம்.ஒரு பாட்டில் நவ்யாவை மழையில் நனைய விட்டுள்ளனர். அதில், பாவாடை, தாவணியில் வந்து கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்.அதேபோல இன்னொரு பாட்டு கிளாமர் காவியம் படைத்துள்ளதாம். ஏற்கனவே ஒப்புக் கொண்ட பழைய படம் என்பதால் இந்தக்காட்சிகளை தவிர்க்காம நடித்துக் கொடுத்தாராம் நவ்யா. மேலும் இனிமேலும் கிளாமரையும் சைடில் ஓட்டிக் கொண்டு நல்லகதைகளிலும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம். அந்த வகையில் நவ்யா நடிக்கும் நல்ல கதைப் படம் தான் ஆடும் கூத்து. இதில் இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக மிகஅழகாகவே நடித்து வருகிறார் நவ்யா. இதில் அவருக்கு நடுத்தர வயதுப் பெண், சினிமா நடிகை, மாடர்ன் பெண் என 3வேடமாம். எல்லா வேடங்களிலும் பின்னி எடுக்கிறாராம் நவ்யா.இதில் நவ்யா தவிர இன்னொரு ஹீரோயினாக மீனாளும் நடிக்கிறார். தவமாய் தவமிருந்து படத்தில் இரண்டாவது ஹீரோயினாகவந்தாரே அதே மீனாள் தான்.

By Staff
ஒழுங்குப் புள்ளையாக கருதப்பட்ட நவ்யா நாயரும் இப்போது கிளாமரில் கலங்கடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நவ்யா நாயரை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு முந்தைய நவ்யா, பிந்தைய நவ்யா என ரெண்டாகப் பிரிக்கலாம்.அப்பாசாமிக்கு முன்பு நவ்யா நாயர் தமிழில் அதிகம் பிரபலமாகவில்லை. தேடித்தான் அவரைப் பிடிக்க வேண்டியிருந்தது. தமிழ்கூறும் நில்லுலகின் ரசிகர்கள் நவ்யாவை அதிகம் ரசிக்கவில்லை.

ஆனால் அப்பாசாமி வந்து அவரது திரையுலக அத்தியாயத்தை ஒரு புரட்டு புரட்டிப் போட்டு விட்டது. இப்போது நவ்யாவின்கையில் நிறையத் தமிழ்ப் படங்கள். அப்பாசாமியின் வெற்றி மட்டும் இதற்குக் காரணமல்ல, தங்கரின் வசவுகளால் கிடைத்த ப்ரீவிளம்பரமும் ஒரு முக்கியக் காரணம்.

அப்பாசாமியில் குடும்பப் பெண்ணாய் நடித்ததன் பலனாக இப்போது கருணாநிதியின் கதை- வசனத்தில் உருவாகியுள்ளபாசக்கிளிகள் படத்தில் பிரபு, முரளிக்கு தங்கையாக கலக்கல் வேடத்தில் நடித்துள்ளார் நவ்யா. இந்தப் படத்திலும் கொஞ்சமேகிளாமர் காட்டினாலும் அப்பாசாமி நவ்யாவையே காணலாம்.

ஆனால் இப்போது மேட்டர் அதுவல்ல, நவ்யாவின் கிளாமர் கலக்கலில் உருவாகி வரும் அமிர்தம் படத்தில் அவரது கேரக்டர்பற்றித்தான். பாசக்கிளிகளுக்கு முன்பாகவே, அப்பாசாமிக்கு முன்பாகவே நவ்யா ஒத்துக் கொண்ட படம்தான் அமிர்தம்.

ரொம்ப நாளாக கிடப்பில் கிடந்த அமிர்தம் படத்தின் ஷூட்டிங், நவ்யாவின் திடீர் பிரபலத்தால் முடுக்கி விடப்பட்டு ஒரு வழியாகமுடிவடைந்துள்ளது.

படம் கிராமத்து கர்நாடக இசைக் குடும்பத்தின் கதை தான் என்றாலும் கிளாமருக்குப் பஞ்சமில்லாமல் எடுத்திருக்கிறார்கள். (படம்ஓடணுமே..) இந்தப் படத்தில் நவ்யா இரண்டு பாட்டுக்களில் கிளாமரில் விளையாடியிருக்கும் நவ்யாவைப் பார்க்கும் ரசிகர்கள்,அப்பாவி...ஸாரி அப்பாசாமி நவ்யாவா இது என்று ஆச்சரியப்படப் போகிறார்களாம்.

ஒரு பாட்டில் நவ்யாவை மழையில் நனைய விட்டுள்ளனர். அதில், பாவாடை, தாவணியில் வந்து கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்.

அதேபோல இன்னொரு பாட்டு கிளாமர் காவியம் படைத்துள்ளதாம். ஏற்கனவே ஒப்புக் கொண்ட பழைய படம் என்பதால் இந்தக்காட்சிகளை தவிர்க்காம நடித்துக் கொடுத்தாராம் நவ்யா. மேலும் இனிமேலும் கிளாமரையும் சைடில் ஓட்டிக் கொண்டு நல்லகதைகளிலும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.

அந்த வகையில் நவ்யா நடிக்கும் நல்ல கதைப் படம் தான் ஆடும் கூத்து. இதில் இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக மிகஅழகாகவே நடித்து வருகிறார் நவ்யா. இதில் அவருக்கு நடுத்தர வயதுப் பெண், சினிமா நடிகை, மாடர்ன் பெண் என 3வேடமாம். எல்லா வேடங்களிலும் பின்னி எடுக்கிறாராம் நவ்யா.

இதில் நவ்யா தவிர இன்னொரு ஹீரோயினாக மீனாளும் நடிக்கிறார். தவமாய் தவமிருந்து படத்தில் இரண்டாவது ஹீரோயினாகவந்தாரே அதே மீனாள் தான்.

Read more about: navya nairs amirtham
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X