»   »  சிம்பு புத்தியை காட்டிவிட்டார்-நயன் பாய்ச்சல்

சிம்பு புத்தியை காட்டிவிட்டார்-நயன் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிக நெருக்கமாக படம் எடுத்துவிட்டு அதை இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார் சிம்பு. இதன்மூலம் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார் என நயனதாரா பாய்ந்துள்ளார்.

சிம்பு-நயனதாரா இடையே உருவான திடீர் காதல் திடீரென புட்டுக் கொண்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கைவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

கொஞ்ச காலமாக இருவருமே அமைதியாக இருந்தனர். இந் நிலையில் நயனதாராவோடு ஹோட்டல் ரூமில் சிம்பு மிக நெருக்கமாக இருந்தபடங்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன.

சோபாவில் அமர்ந்தபடி நயனதாராவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் உதடுகளை கடித்துக் கொள்கின்றனர்.இந்த கடி படங்கள் இப்போது திடீரென வெளியில் வந்துள்ளன.

இது குறித்து சிம்பு தரப்பிடம் கேட்க முயன்றால் பதிலே கிடைக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தரோ, இப்பயெல்லாம் போலி படத்தை நிஜம்போல காட்ட டெக்னாலஜி வந்துவிட்டது. படத்தை ஒட்டி வெட்டி வெளியிட முடிகிறது. இதுக்கு மேல என்னத்த சொல்ல என்றார் கமுக்கமாக.

ஆனால், நயனதாரா இந்தக் காட்சிகளை மறுக்கவில்லை. சிம்புவோடு நெருக்கமாக இருந்தபோது இருவரும் எல்லை மீறி எடுத்துக் கொண்ட படம்தான் இது என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமின்றி துபாய், சிங்கப்பூர் என ஜோடியாய் இருவரும் சுற்றியதும், ஒரே ஹோட்டல் ரூமில் தங்கி என்ஜாய் செய்ததும் ஒரு காலம்.அந்த கால கட்டத்தில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நயனதாரா கூறியதாவது:

சிம்பு எப்படிப்பட்ட ஆசாமி என்பதை புரிந்து கொண்ட பிறகு தான் அவரை விட்டு விலகினேன்.

இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பதில் ஆரம்பித்து பல் துலக்குவது வரை எல்லா கோணத்திலும் படம்எடுப்பார். சோபாவில் அமர்ந்திருப்பது போலவும் பல கோணங்களில் படம் எடுத்துள்ளார்.

அந்தப் படங்களை அவ்வப்போதே எல்லாம் அழித்துவிட்டதாகக் கூறுவார். ஆனால், அது பொய் என்று இப்போது தான் தெரிகிறது. இந்தப்படங்களை அவர் தான் வெளியிட்டிருக்க முடியும்.

முத்தம் தந்த (லிப் கிஸ்) போட்டோவை எப்போ எடுத்தார், எங்கே எடுத்தார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என்படத்தை இப்படி உலவ விட்டிருக்கிறார். இது அவரது தவறான புத்தியைத் தான் காட்டுகிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil