»   »  தனுஷுடன் நயனதாரா

தனுஷுடன் நயனதாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் சிலுத்துக் கொண்டு ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆன நயனதாரா, சிம்புவின் பரம எதிரி தனுஷுடன் ஜோடி போட்டு புதுப் படத்தில்நடிக்கிறார்.

ஹரி அறிமுகப்படுத்திய அழகிய பொம்மை நயனதாரா. முதல் படமான ஐயாவிலேயே அத்தனை பேரின் கண்களுக்கும் நல் விருந்தளித்தார்.சந்திரமுகி அவரது மார்க்கெட்டை தூக்கி உச்சத்தில் நிறுத்தியது.

அதன் பின்னர் விஜய் படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்ற குத்துப் பாட்டுக்கு கும் டான்ஸ் ஆடினார். நயனதாராவின் டிமாண்ட் அதிகமானநிலையில் வல்லவன் படத்தில் புக் ஆனார். அதன் பின்னர் அவரது வாழ்க்கைப் பாதை, வழுக்குப் பாறையாக மாறிப் போனது.வல்லவனில் நடிக்க ஆரம்பித்த அவர் சிம்புவின் காதல் வலையில் வீழ்ந்தார். ஆனால் படம் முடிவதற்குள்ளாகவே அந்தக் காதல்கன்னாபின்னாவென கலர் மாறி, களங்கமாகிப் போனது.

சிம்பு மீது சரமாரியாக புகார்களைக் கூறிய நயனதாரா தெலுங்குக்குப் போய் விட்டார். அவர் மீண்டும் தமிழுக்கு வருவாரா என்ற சந்தேகம்எழுந்தது. ஆனால் சத்தம் போடாமல் தமிழுக்குத் திரும்பி வந்துள்ளார் நயனதாரா.

கஸ்தூரிராஜா தயாரிப்பில், செல்வராகவனின் உதவியாளர் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு ஜோடியாகநடிக்கிறார் நயனதாரா. படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இப்படத்தின் போட்டோ செஷன் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் நயனதாரா கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர்சென்னைக்கு வந்துள்ளதால், திரையுலகில் புது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம். ஏதாவது வம்பு வந்து விடப் போகிறதே என்றமுன்னெச்சரிக்கை காரணமாக இந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் கஸ்தூரி ராஜா.

அதேசமயம், நயனதாராவும் போலீஸ் பாதுகாப்பு தேவை என்று தனிப்பட்டை முறையில் கோரியதால், உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநகரகாவல்துறை ஆணையரே உத்தரவிட்டுள்ளாராம்.

யாரடி நீ மோகினி ஒரு ரீமேக் படம். தெலுங்கில் இப்போது செல்வராகவன் இயக்கிக் கொண்டிருக்கும் அடவரே மடலுகு அர்த்தலே வெருளேபடத்தின் ரீமேக்தான் இப்படம். தனுஷ், நயனதாரா தவிர ஸ்ரீகாந்த், பிரசன்னாவும் இப்படத்தில் இருக்கிறார்களாம். இருவருக்கும் முக்கியமானகேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் கதை, திரைக்கதையை செல்வராகவன் பார்த்துக் கொள்ள, ஜவகர் இயக்குகிறார். அவருக்கு இதுதான் முதல் படம்.திஇப்படத்தில் நயனதாராவை நடிக்க வைக்க தனுஷ் தரப்பு முயல்வதாக செய்திகள் கிளம்பியபோது அதிர்ச்சி அடைந்தார் சிம்பு. நயனதாராவைநேரில் சந்தித்துப் பேச ஹைதராபாத்துக்குப் பறந்தார். அதை அறிந்த நயனதாரா கேரளாவுக்கு ஓடி விட்டார்.

சற்றும் மனம் தளராத சிம்பு, சமீபத்தில் நயனதாரா சென்னைக்கு வந்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கேக் கிளம்பிப் பானார். ஆனாலும்அவரை பார்க்க மறுத்து வாட்ச்மேனை விட்டு வெளியேற்றினார் சிம்புவை.

சிம்புவின் பரம வைரியான தனுஷுடன் இணைந்து நடிப்பதால் சிம்பு தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வரலாம் என பயப்படுகிறார் நயன்தாரா.இதனால்தான் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையே, ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸுக்குப் பிறகே தமிழில் மீண்டும் நடிக்கும் முடிவை எடுத்தாராம் நயனதாரா. சிம்பு விவகாரத்தால்நொந்து போயிருந்த நயனதாராவிடம், சூப்பர் ஸ்டார் மனம் விட்டுப் பேசி அவரது குழப்பத்தை தெளிவுபடுத்தி, தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும், உனது திறமையை வீணடிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்தே தமிழ் இனி வேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை மாற்றிக் கொண்டு தனுஷுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நயன்தாரா.

பட பூஜை நேற்று நடந்தபோது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பூஜையின்போது என்ன நடந்தது என்பது குறித்துத் தகவல்இல்லை. பட யூனிட்டைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். அதைக் காட்டினால்தான் உள்ளேயே விடுகிறார்கள்.

முதல் கட்டப் படப்பிடிப்பை பிரசாத் மற்றும் ஏவி.எம். ஸ்டுடியோக்களில் நடத்தவுள்ளனர். அதன் பின்னர் துபாய்க்குப் பறக்கிறார்கள். அங்கு 2வதுகட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பும் படக்குழு, ஹைதராபாத்தில் பல சீன்களை படமாக்கவுள்ளனராம். ஹைதராபாத்தில் எடுத்தால்நல்லது என்று நயனதாரா விரும்பியதால் அவரது விருப்பப்படி பல காட்சிகளை ஹைதராபாத்தில் வைத்து சுடவுள்ளனராம்.

களம் சூடாகிறது, வெல்லப் போவது யாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil