For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயலலிதாவுடன் நயன் சந்திப்பு-ரூ.5 லட்சம் 'தானே' நிதி

    By Mathi
    |

    சென்னை: தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

    தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர்.

    இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.

    தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    Actress Nayan thara donated Rs5 Lakhs towards the relief work for Thane Cyclone hit areas of Tamilnadu. She handed over a cheque for the sum to the Chief Minister of Tamilnadu Jayalalithaa at the Secretariat today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X