ஏர்போர்ட்டில் நயன்தாராவும், ஹன்சிகாவும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்?
சென்னை: விமான நிலையத்தில் நயன்தாராவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காதது போன்று சென்றிருக்கிறார்கள்.
சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் திரை உலகில் கவனம் செலுத்த தற்போதைக்கு திருமணம் இல்லை என்றார் அவர். இதையடுத்து சிம்புவும், ஹன்சிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின.
இந்நிலையில் சிம்பு தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.

ஹன்சிகா
சிம்பு நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இதை அவர் மறுத்தார்.

லடாய்
சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டனர் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

காதல் முறிவு
ஹன்சிகா காதலர் தினத்தை தனது காதலருடன் கொண்டாடாமல் தனது தோழிகளுடன் கொண்டாடினார். இதனால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

நயன்-ஹன்சிகா
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையம் ஒன்றில் நயன்தாராவும், ஹன்சிகாவும் சந்தித்துள்ளார்கள். ஆனால் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்களாம்.

முதல் சந்திப்பு
ஹன்சிகாவும், நயன்தாராவும் இதற்கு முன்பு சந்தித்து பேசியதே இல்லை. மேலும் ஒருவர் வாய்ப்பை மற்றொருவர் தட்டிப் பறித்ததும் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக சந்தித்தபோது பார்த்தும் பார்க்காதது போன்று சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











