இனி எப்போதும் வேண்டாம் இந்திப் படங்கள்! - நயன்தாரா

By Shankar

இத்தனை ஆண்டுகள் நடித்துவிட்டேன். இனியும் இந்தி சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. எனக்கு இந்திப் படங்களே வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார்.

பொதுவாக நடிகைகள் எந்த மொழியில் நடித்தாலும் இறுதி இலக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும், பணம் குவிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் நயன்தாரா அதற்கு நேர்மாறாக உள்ளார்.

மீண்டும் முதலிடம்

மீண்டும் முதலிடம்

கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் அவர், பல்வேறு சர்ச்சைகள், காதல் விவகாரங்களில் அடிபட்டாலும், இன்றும் தமிழ் - தெலுங்கில் அதிகம் விரும்பப் படும் நடிகையாகத் திகழ்கிறார்.

இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல்

பிரபு தேவா காதல் விவகாரத்துக்குப் பிறகு அவர் நடித்த ‘ஆரம்பம்', ‘ராஜா ராணி' படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இன்று அவர் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் வெளியாகியுள்ளது. உதயநிதி, சந்தானத்துடன் நடித்துள்ளார்.

குடும்பப் பெண்

குடும்பப் பெண்

இந்தப் படம் குறித்து நயன்தாரா கூறுகையில், "இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன்.

அனாமிகா

அனாமிகா

அனாமிகா படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த கஹானி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் நான் பிரச்சினை செய்ததாக வந்த செய்திகள் தவறு.

எல்லா வகை வேடங்களிலும்

எல்லா வகை வேடங்களிலும்

காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே நான் தேர்வு செய்து நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. எனக்கு காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும். அதே நேரம் காமெடி படங்களில் மட்டுமே நடித்தாலும் விரும்ப மாட்டார்கள். கதைக்கும் என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் நடிக்க ஒப்புக் கொள்வேன்.

நோ இந்தி

நோ இந்தி

இந்தியில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு இந்தி படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. தென் இந்திய மொழி படங்களில் நடிப்பதே போதும்.

பிடித்த படங்கள்

பிடித்த படங்கள்

நான் நடித்த ‘ராஜா ராணி', ‘பில்லா', ‘யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் எனக்கு பிடிக்கும்.

சம்பாதித்தேன்... கற்றுக் கொண்டேன்

சம்பாதித்தேன்... கற்றுக் கொண்டேன்

எனது வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நடந்துள்ளது. அதில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். சினிமா நிறைய பணம் புகழை சம்பாதித்து கொடுக்கிறது. அது போல் பாடங்களையும் கற்று கொடுக்கிறது.

திருமணம் நடக்கும்

திருமணம் நடக்கும்

நான் திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். திருமணத்தை நான் தவிர்க்கவில்லை. அது நடக்கும் போது நன்றாகவே நடக்கும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X