கோடி கொடுத்தாலும் 'நோ'!-நயன்தாரா

அசினும் த்ரிஷாவும் ஆளுக்கொரு கூல் டிரிங்க் பிராண்டைப் பிடித்து உலுக்க கோடி கோடியாகக் கொட்டுகிறது பணம்.
இந்தச் சூழ்நிலையில், அண்மையில் ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருக்க ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என நடிகை நயன்தாராவிடம் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை, கொஞ்சமும் தயக்கமின்றி நயன்தாரா மறுத்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.
இதுகுறித்து கேட்டதற்கு, "விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்பது அவருடைய கொள்கை. ஒரு முறை முடிவு செய்தால் அதிலிருந்து பின்வாங்குபவள் நான் அல்ல. வேண்டாம் என நான் முடிவு செய்த பிறகு, எத்தனை கோடி சம்பளம் ந்தால்தான் என்ன? நாம் பயன்படுத்தாத ஒரு பொருளை மற்றவர்களை வாங்கிப் பயன்படுத்த சொல்வது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது என்பதுதான் எனது கருத்து..." என்றார்.
வெரி குட்!
Comments
ad films asin அசின் சினிமா வாய்ப்பு த்ரிஷா நயன்தாரா மறுப்பு விளம்பரப் படங்கள் declining offer nayanthara new offer trisha


Click it and Unblock the Notifications