நடிப்பைத் தொடர நயனதாரா திட்டம்?
நடிகை நயன்தாரா இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியானது. கடந்த 18ம் தேதி வெளியான தெலுங்கு புராணப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் தான் நயன்தாராவின் கடைசி படம் என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.
நயன் நடிப்பதை பிரபுதேவாவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளா சென்ற நயன்தாரா சினிமா கோஆர்டினேட்டர் கண்ணில் பட்டுவிட்டார். உடனே அவர் நயனிடம் தமிழ்ப் படங்களில் நடிக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.
இதற்கு நயன் என்ன சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை, எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை என்று தானே. ஆனால் நயன் வேறு ஒரு பதிலைக் கூறியுள்ளார்.
அதாவது, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை, பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நயன் மீண்டும் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












