Just In
- 6 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 53 min ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 57 min ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐராவில் நயனின் 'பி.எல்.'-ஐ பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயிடுவார்களாம் ஆடி
சென்னை: ஐரா படத்தை பார்க்கும் ரசிகர்கள் நயன்தாராவின் பாடி லாங்குவேஜை பார்த்து அதிர்ந்துவிடுவார்கள் என்று இயக்குனர் சர்ஜுன் தெரிவித்துள்ளார்.
லட்சுமி குறும்படம் புகழ் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ஐரா. படத்தின் தலைப்பு மட்டும் அல்ல டீஸரும் வித்தியாசமாக உள்ளது.
இந்நிலையில் படம் மற்றும் நயன்தாரா குறித்து சர்ஜுன் கூறியிருப்பதாவது,

நயன்தாரா
பவானி கதாபாத்திரத்திற்காக நயன்தாரா தனது வழக்கமான மேக்கப்பை கைவிட்டுள்ளார். நயன்தாரா இதுவரை நடித்திராத கதாபாத்திரமாக அது அமைய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளேன்.

நடிப்பு
ஐரா படத்தில் மேக்கப் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் நயன்தாரா புதுமை செய்துள்ளார். அவரின் பாடி லாங்குவேஜை பார்த்து பார்வையாளர்கள் அதிரப் போகிறார்கள். பவானி கதாபாத்திரம் கருப்பு, வெள்ளையில் தான் திரையில் வரும். பிளாஷ்பேக் காட்சிகள் கருப்பு, வெள்ளையில் வருவது எனக்கு பிடித்துள்ளது. கதையை எழுதும்போதே இதை முடிவு செய்துவிட்டேன்.

இரட்டை கதாபாத்திரம்
சாதாரண குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண் யமுனாவாகவும் நயன்தாரா நடித்துள்ளார். அது அவரின் மற்றொரு கதாபாத்திரம். வழக்கமாக ஒருவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தால் அவர்களுக்கு இடையே தொடர்பு இருக்கும். இரட்டையர்களாக இருப்பார்கள், உடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் பவானிக்கும், யமுனாவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. திரையில் இரண்டு பேர் போன்று தெரிவார்கள் என்கிறார் சர்ஜுன்.
டீஸர்
ஐரா டீஸரை பார்த்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.