தல சொல்லியும் ‘விஸ்வாசம்’ பிரிவியூ பார்க்க மறுத்த நயன்.. ஏன் தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் ப்ரிவியூ பார்க்க மறுத்து விட்டாராம் நயன்தாரா.
சென்னை: அஜித் கூறியும் கூட விஸ்வாசம் படத்தின் ப்ரிவியூவைப் பார்க்க நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 10ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தினை புத்தாண்டு தினத்தன்று தன் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து பார்த்தார் அஜித்.
அப்படத்தின் நாயகியான நயனுக்கும், விஸ்வாசம் ப்ரிவியூ போட்டுக் காட்ட அஜித், இயக்குநர் சிவாவிடம் கூறியுள்ளார்.

ஆனால் புத்தாண்டு கொண்டாடுவதற்காக முன்னதாகவே காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு பறந்து விட்டார் நயன். அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னதாக அவரிடம் விஸ்வாசம் பட ப்ரிவியூவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பயணத்திற்கான ஏற்பாட்டில் பிசியாக இருந்ததால் அப்போது அவரால் பார்க்க முடியவில்லை.
சரி அவர் சென்னை திரும்பியதும் அவருக்கு படத்தை போட்டுக் காட்டலாம் என தயாரிப்பாளர் தரப்பு நினைத்துள்ளது. ஆனால், அதனை மறுத்த நயன், 'விஸ்வாசம் படத்தை ப்ரிவியூ பார்க்க விரும்பவில்லை என்றும், பட ரிலீசுக்குப் பின்னர் மக்களோடு, ரசிகர்களோடு தியேட்டரில் பார்க்க விரும்புவதாகவும்' கூறிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











