என்னையும், ஆர்யாவையும் அறியாமலேயே அதிகம் நெருக்கம் வெளிப்படுகிறது: நயன்
சென்னை: ஆர்யாவுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு வீட்டில் உட்காரும் முன்பு நயன்தாரா கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வந்தார். அப்போது அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட மாட்டோமா என்று ஆர்யா ஏங்கியுள்ளார்.
அவரது ஆசையை பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நிறைவேற்றி வைத்தவர் இயக்குனர் ராஜேஷ் தான்.

ஜோடி நல்லா இருக்கு
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்-ஆர்யா ஜோடி பார்க்கவும் நன்றாக இருந்தது, அவர்களின் நடிப்பும் பெயர் வாங்கியது.

ராஜா ராணி
தற்போது அவர்கள் இருவரும் ராஜா ராணி படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் அவர்கள் இருவரும் முந்தைய படத்தை விட நெருக்கமாக நடித்திருக்கிறார்களாம்.

ஆர்யாவுடன் மட்டும் ஏன் இந்த நெருக்கம்?
அது என்ன ஆர்யாவுடன் மட்டும் நெருக்கமாக நடிக்கிறீர்கள் என்று நயன்தாராவிடம் கேட்டதற்கு, எப்படி நடிக்க வேண்டும் என்பது கதையைப் பொறுத்தது. ஆர்யா எனது நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அதனால் நடிப்பிலும் எங்களை அறியாமல் அதிகம் நெருக்கம் வெளிப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











