»   »  நயனாவுக்கு கொலை மிரட்டல்?

நயனாவுக்கு கொலை மிரட்டல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் வார்த்தை மல்லுக்கட்டில் தீவிரமாக இறங்கியுள்ள நயனதாராவுக்குசெல்போன் மூலம் யாரோ ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம். அவராகஇருக்குமோ என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

சிம்பு, நயனதாரா காதல் வல்லவன் பட ரிலீஸைத் தொடர்ந்து முறிந்து, முடங்கிப்போய் விட்டது. இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்தி குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

கையைக் கீறிக் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளக் கோரி கெஞ்சினார் என்றுசிம்புவும், உன்னைப் பத்தி நான் பேசினா நாறிப் போய்டும், ஜாக்கிரதை எனநயனதாராவும் அதிரடியாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் நயனதாராவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வரஆரம்பித்துள்ளதாம். இதனால் பயந்து, பீதியடைந்து போய் உள்ளாராம் நயனதாரா.

சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்ட கையோடு, நயனதாரா இப்போதுஆந்திராவில் முகாமிட்டுள்ளார். யோகி என்ற படத்தில் அவர் தற்போது நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது நயனதாராவின் செல்லில் வந்த ஒருவர்,அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த போன் அழைப்பு வந்த பிறகு நயனதாராமுகம் வெளிறிக் காணப்பட்டாராம். போனையும் ஆப் செய்து விட்டு அப்படியேஅமர்ந்து விட்டாராம்.

இதனால் படக்குழுவினர் நயனதாராவை தொல்லை செய்யாமல் அப்படியேஅமைதியாக விட்டுள்ளனர். அதன் பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர்வந்து அவரை அமைதிப்படுத்தினராம். அவர்களிடம் தன்னை யாரோ செல்போனில்கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக நயனதாரா தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர்கள், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்குமாறு ஆலோசனைகூறினராம். ஆனால் அவர்கள் சொன்னதை முழுமையாக கேட்கும் அளவுக்குநயனதாரா அப்போது தெளிவாக இல்லையாம், பயந்து, பீதியடைந்துகாணப்பட்டாராம்.

மிரட்டியது யாரோ? அவரா இருக்குமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil