»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil
வாய்ப்புகளைப் பிடிப்பதில் நயன்தாராவுக்கு நிகர் நயனதாரா தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சமீபத்திய கேரளவரவுகளிலேயே படு வெவரமான ஆள் இவர் இவர் தானாம்.

வழக்கமாக கேரள வரவுகள் தமிழில் ஊன்றி, ஒரு ரவுண்ட் அடித்து, சம்பாதித்துவிட்டுத் தான் ஓய்வார்கள். மும்பை பிகர்கள்மாதிரி வந்தோமா காணாமல் போனோமா என்றில்லாமல் முடிந்தவரை கால் பதிக்கப் பார்ப்பார்கள்.

ஆனால், இந்த மற்ற கேரள வரவுகளுக்கு எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தந்துவிட்டார் நயனதாரா.

ஐயாவில் அறிமுகமாகி, பெரிய அளவில் பேசப்படக் கூடாத நிலையிலும் கூட சந்திரமுகியில் ரஜினியின் ஜோடி சேர்ந்துகோலிவுட்டையே கலக்கிவிட்டார்.

ரஜினியுடன் ஜோடி சேர்ந்து விட்ட ஒரே காரணத்தால் அவரைத் தேடி ஏகத்துக்கும் பட வாய்ப்புகள். அதில் எஸ்.ஜே.சூர்யாவின்கள்வனின் காதலியும் ஒன்று. இதில் படு பயங்கர கவர்ச்சியில் குதித்துவிட்டார் நயன்தாரா.

வழக்கமாக சூர்யா ஹீரோ என்றாலே அதில் நடிக்கும் ஹீரோயினுக்கு ஏதாவது அடாத ரோல் தான் தருவார். கள்வனின்காதலியில் நயனதாராவுக்கு தனது டிரேட் மார்க் ரோலைத் தான் தந்திருக்கிறார். நயனதாராவை உரித்து எடுத்து வருகிறார் சூர்யா.

இதில் சூர்யாவின் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒத்துழைப்பு வந்து அசத்தி வருகிறார் நயனதாரா.

சூர்யாவுடன் கஜினி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலியில் நடித்துக் கொண்டே மேலும் இளவட்டங்களின்படங்களில் இடம் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார் நயனதாரா.

ஹீரோக்களுடன் நேரடியாக போனில் பேசி, தானே அறிமுகம் செய்து கொண்டு, முடிந்தால் மீட்டிங்கும் நடத்தி வாய்ப்புகளைஎளிதாக பிடித்து விடுகிறார். இந்த விஷயத்தில் அவருக்கு ரொம்பவும் ஒத்தாசையாய் இருப்பது அவரது மேனேஜர் அஜீத்.

அஜீத்தின் ஒத்துழைப்போடு எஸ்.ஜே.சூர்யாவை மடக்கியதோடு, சிம்புவையும் மடக்கிவிட்ட நயனதாரா மிகவும் மகிழ்ந்து போய்சமீபத்தில் அஜீத்துக்கு ரூ. 8 லட்சத்தில் ஒரு போர்ட் ஐகன் காரை வாங்கித் தந்திருக்கிறார்.

சிம்புவுடன் நடிக்கப் போகும் வல்லவன் படத்தில் ஏற்கனவே சிம்புவுக்கு 2 ஜோடிகள். ஒருவர் காதல் சந்தியா, இன்னொருவர் ரீமாசென். இப்போது நயன்தாராவையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இவர்களில் சந்தியாவைத் தவிர மற்ற இரண்டு பேரையும் கவர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை தனியாகச் சொல்லத்தேவையில்லை.

இப்படி டைரக்ட் அப்ரோச் செய்து வாய்ப்பு பிடித்து வரும் நயன்தாராவைப் பார்த்து மற்ற இளம் மலையாள குட்டிகள் கோபத்தில்உச்சியில் உள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil