»   »  ஹன்சிகாவுக்கு செக் வைத்த நயனா!

ஹன்சிகாவுக்கு செக் வைத்த நயனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆசின் ஸ்டைல் அதிரடி வாய்ப்புப் பிடியில் குதித்துள்ளார் நயனதாரா. ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.வல்லவன் பிடியிலிருந்து வெளியேறியுள்ள புத்துணர்வில், தமிழில் ஒரு ரவுண்டு முடித்து அடுத்த ரவுண்டுக்குஆர்ப்பாட்டமாக தயாராகி வரும் நயனதாராவுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் அலைமோதிய வண்ணம் உள்ளது.

இதுவரை பட வாய்ப்புகளை ஏற்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கி விட்டதால் வருகிற வாய்ப்புகளையெல்லாம்வளைத்துப் போட ஆரம்பித்துள்ளாராம் நயனதாரா. அம்மணி கையில் இப்போது 3 தெலுங்குப் படங்கள்உள்ளதாம். அதில் முக்கியமானது, ரவிதேஜாவுடன் நடிக்கும் ஒரு படம்.

இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி என்ற அழகுப் பாப்பாதான் முதலில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்தார்.ஆனால் இப்போது திடீரென மோத்வானிக்கு விடை கொடுத்து விட்டு நயனதாராவை புக் செய்துள்ளார்களாம்.

ஹன்சிகா சின்னப் புள்ளையிலிருந்தே நடித்து வருபவர். வளர்ந்து, நல்ல வனப்புடன் திகழும் ஹன்சிகா, இந்ததிடீர் நீக்கத்தால் அப்செட் ஆகியுள்ளாராம். நயனதாராதான் குறுக்கால புகுந்து வாய்ப்பை அள்ளி விட்டதாககடுப்புடன் புலம்புகிறாராம் ஹன்சிகா.

நயனதாரா நடிக்கவுள்ள இப்படத்திற்கு துபாய் ஸ்ரீனு என்று பெயர் வைத்துள்ளனர். மணி சர்மாஇசையமைக்கிறார்.

இதேபோல மேலும் சில படங்களிலும் ஏற்கனவே புக் ஆகியுள்ள நாயகிகளுக்குப் பதில் நயனதாரா நடிக்கக்கூடும் என்று டோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

புத்துணர்ச்சியுடன் புயலென புறப்பட்டிருக்கும் நயனதாரா அலையில் சிக்கி எத்தனை அழகிகள் அடிபடப்போகிறார்களோ!

Read more about: nayanatara replace hansika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil