»   »  அஜீத், சூர்யாவுடன் நயனதாரா!

அஜீத், சூர்யாவுடன் நயனதாரா!

Subscribe to Oneindia Tamil

சிம்பு பஞ்சாயத்துக்குப் பின்னர் தெலுங்குக்குத் தாவிய நயனதாராவுக்கு இப்போது அங்கு நேரம் சரியில்லாததால்,மறுபடியும் தமிழுக்கே திரும்பி வருகிறார்.

சிம்புவுடன் இருந்த நட்பை முறித்துக் கொண்ட நயனதாரா அப்படியே தெலுங்குக்குத் தாவினார். யோகி என்றபடத்தில் நடித்து வந்தார். சிம்பு அன் கோ தரப்பிலிருந்து வந்ததாக கூறப்பட்ட மிரட்டல்களிலிருந்து தப்பிக்கஹைதராபாத்திலேயே நயனதாரா தங்கி விடுவார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் யோகி சமீபத்தில் வெளியாகி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இது நயனதாராவுக்கு அப்செட்ஆக்கி விட்டது. இந்தப் படம் ஓடினால் நிரந்தரமாக தெலுங்கிலேயே நடிக்கலாம் என நினைத்திருந்த அவருக்குயோகியின் தோல்வி சோகத்தைக் கொடுத்து விட்டது.

அதை விடப் பெரிய சோகமாக புதுப் படங்கள் எதுவும் வரவில்லையாம். ஒரே ஒரு படம்தான் நயனதாராவிடம்இப்போது உள்ளதாம். இதனால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த நயனதாரா பேசாமல்தமிழுக்கேத் திரும்பி விட முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ரகசியப் பயணமாக சென்னைக்கு வந்த நயனதாரா இயக்குநர் ஹரியைத் தொடர்பு கொண்டார்.

சூர்யா நடிக்க ஹரி இயக்கும் வேல் படத்தில் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். சூர்யாவுடன்பேசி விட்டு சொல்வதாக ஹரி உறுதியளித்துள்ளாராம். இந்த வாய்ப்பு நிச்சயம் கிடைத்து விடும் என்றநம்பிக்கையில் உள்ளார் நயனதாரா.

அதேபோல அஜீத்துடன் தொலைபேசி மூலம் ஹைதராபாத்திலிருந்து பேசிய நயனதாரா, அவரின் பில்லா -2007படத்திலும் நடிக்க துண்டைப் போட்டுள்ளார். அஜீத்தும் நிச்சயம் நீங்கள்தான் ஹீரோயின் என்று போனில்அடித்துச் சத்தியம் செய்துள்ளாராம்.

இந்த இரு படங்களும் உறுதியானவுடன் முறைப்படி சென்னைக்கு மீண்டும் திரும்பவுள்ளார் நயனதாரா.

வருக, வருக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil